Og Mardino

216 16 7
                                    

இன்றிலிருந்து நான் ஒவ்வொன்றையும் நேசிப்பவனாகிறேன். என் உடலை வெதுவெதுப்பாக்கும் சூரியனை நேசிக்கிறேன். என் மனசை சாந்தப்படுத்தும் மழையை நான் விரும்புகிறேன். எனக்கு வழி காட்டும் ஒலியும் எனக்கு உகந்ததே; ஆனால் இருட்டும் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் அப்போது தானே நான் மினுக்கும் நட்சத்திரங்களை காண முடியும்? மகிழ்ச்சி என் மனசை விசாலப்படுத்துமானால், சோகம் என் ஆத்மாவை உணர செய்கிறது. வெற்றிகள் எனக்குரியவை; தோல்விகள் எனக்கு சவால்.

இந்த நாள் அன்பால் நிறைந்த இனியநாள்.
.
.
.
.
.

தோல்விகளுக்காக நான் பிறக்கவில்லை. அன்றி, தோல்வி என் நரம்புகள் இல்லை. நான் ஓடுபவன், விரட்டி செல்லும் மந்தை ஆடு அல்ல. நான் சிங்கம். இந்த சிங்கம் ஆடுகளுடன் பேசாது, நடக்காது அல்லது தூங்காது. நான் அழுது புலம்புவர்களின் பேச்சை கேட்க மாட்டேன். ஏனெனில், அது தொற்று நோய். அவர்கள் ஆட்டு மந்தையில் சேரட்டும். தோல்வி என்றும் கசாப்புக் கடை விதியல்ல.

வெற்றி என் பக்கம்.
.
.
.
.
.

என் பிறவி எதேச்சையாக நிகழ்ந்ததல்ல. நான் பிறந்தது வளர்ந்து ஒரு மலையாகத்தானேயன்றி, சிறுத்து மணலாக உதிர்ந்து போக அல்ல. ஆகவே, என் திறமைகள் என்னிடம் கெஞ்சும் வரை நான் அவற்றை உபயோகப்படுத்துவேன்.

நான் இறைவனின் மிகப் பெரிய அதிசயம்.
.
.
.
.
.

நேற்று புதைக்கப்பட்டுவிட்டது. அதைப்பற்றி எண்ணுவதில் பயனில்லை. நான் இந்த நாளை என் வாழ்வில் கடைசி நாளாக எண்ணி வாழ போகிறேன்.

நான் வாழ்வது இன்றைக்காக.
.
.
.
.
.

இது போன்ற வாழ்க்கையில்  வெற்றி பெற உதவும் 10 விடயங்களை கொண்டு எழுதப்பட்ட புத்தகமே!

"உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்கள் "
By - og Mardino

The greatest salesman in the world!

Talk With Books📖 Where stories live. Discover now