அணு - உயிரியல் ஆயுத உற்பத்தி வேண்டாமே வேண்டாம்.
பேராசை, அதிகார ஆக்கிரமிப்பு வெறி, இராணுவ மேலாதிக்கம், எல்லைதகராறு, மாறுபட்ட அரசியல் சித்தாந்தம் முதலானவைகளே உள்நாட்டு, சர்வதேச யுத்தங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
அணு குண்டு வெடித்த போது மயிரிழையில் உயிர் தப்பியவர்களின் அனுபவங்களை கூறும் நூல் :
ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் சுடு காடாக மாறி விட்டன. அந்த பெரிய பாலம் பாதிக்குமேல் உடைந்து சுக்குநூறாகி மீதி எரிந்து ஆற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. நான் மறு பக்கத்திலுள்ள புகையிரத இரும்பு பாலத்தை நோக்கி ஓடினேன். தண்டவாளத்தின் குறுக்கே போடப்பட்டிருந்த மரக்கட்டைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
மக்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போன்று ஆற்றைக் கடக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். தண்டவாளத்தில் நான்கைந்து மனித உடல்கள் எரிந்து கருகி கொண்டிருந்தன. அவர்களின் முனகல் ஒலி இலேசாக கேட்டதிலிருந்து இன்னும் அவர்கள் சாகவில்லை என்று அறிந்து கொண்டேன்.
பாலத்தின் மீது தலைகள், கைகால்கள் முதலான உடலுறுப்புகள் அங்கும் சிதறி காணப்பட்டன. ஒருவன் ஆற்றில் தவறி விழுந்தான். அவனை தொடர்ந்து பலர் ஆற்றில் பாய்ந்தனர்.
நான் தட்டுதடுமாறி தெய்வாதீனமாக ஆற்றின் அக்கரையை அடைந்தேன். செத்த - செத்து கொண்டிருக்கின்ற மனித உடல்கள் மலைபோல் குவிந்து காணப்பட்டன. சிலர் தங்களைக்குப் பிரியமானவர்களின் பெயர்களை சொல்லி முனங்கிக் கொண்டிருந்தனர்.
நான் முன்னேற முடியாமல் வழியை அடைத்து கொண்டிருந்த சில சடலங்களை பிடித்து தள்ளினேன். கருகிய தசைகளும் தோல்களும் என் கையில் ஒட்டிக் கொண்டன. எனது கைகளும் முகமும் பற்றி எரிந்து கொண்டிருப்பதை அப்போது அறிந்து கொண்டேன்.
நான் மனித உடல்களின் மீது ஏறி நடக்க தொடங்கினேன். வேறு வழியில்லை. பலருடைய எலும்புகள் முறியும் சத்தம் எனக்கு கேட்டது.
ஆதாரம் : Robert jungk எழுதிய சாம்பல் குழந்தை.
Hi guys!
இப்புத்தகம் inspiration & motivation சார்ந்த பயனுள்ள புத்தகம். So இதை பல பேர் வாசிக்க மாட்டார்கள்.வாசிப்பவர்கள் இப்புத்தகம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளேன்...
So if you like vote & comment!
YOU ARE READING
Talk With Books📖
General Fictionஇது புது வித அனுபவமாக அமையும். நான் படித்த, படிக்க போகும் famous writers ன் புத்தகங்கள் பற்றி சிறிய introduction! இதனால் இப்புத்தங்களை தேடி வாசிக்க உங்கள் மனதை தூண்ட வைக்க செய்யும் முயற்சி. இது உங்கள் வாசிப்பின் கோணத்தை சற்று மாற்றி வாழ்வில் வெற்றி...