நான் og Mardino,
என் சிறு வயது நினைவுகளில் என் அம்மா தனது மகனை பற்றி கனவு கண்டது நினைவிருக்கிறது.
"ஒரு நாள் நீ ஒரு எழுத்தாளனாவாய்... சாதாரண எழுத்தாளன் அல்ல... மிகப்பெரிய எழுத்தாளன்" என மறுபடி மறுபடி கூறினாள்.
பள்ளியில் இருந்து படிப்பு முடிந்து வெளிவந்த 6 வது வாரத்தில் என் அம்மா திடீரென இறந்து போனார். அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது.
கல்லூரி செல்ல வேண்டியவன், ஒரு காகித தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன்.
உலக பேரில் 445 வது அதிகமாக அழிவு செய்யும் குழுவில்... நல்ல மனிதர்.
போர் முடிந்ததும் America வந்த போது வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. காதலித்த பெண்ணை மணந்து கொண்டேன்.
10 வருடங்கள் இரவு பகல் உழைத்தும் insurance வியாபாரத்தில் வருமானம் போதாமையால் கடனில் விழுந்தேன்.
வேலை அலைச்சலுக்கு பின் மது அருந்த ஆரம்பித்தேன். காலம் ஓட ஓட மது பானத்துக்கு அடிமையாகினேன். இதனால் என் மனைவியும் மகளும் என்னை விட்டு சென்றனர்.
இரவில் சாக்கடைகளில் கிடக்கும் ஈனப் பிறவியாக நரக வாழ்க்கை வாழ்ந்தேன்.
ஒரு குளிர் விடியலில் என் வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிக்க இருந்தேன். ஒரு பெட்டி கடையில் துப்பாக்கி 29 dollars கு என்றிருந்தது. என்னிடம் 30 dollars இருந்தது. அதனால் என் நான் இருக்கும் இருட்டறைக்கு சென்று நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து ஒரே அழுத்து....
அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை, என்னை நானே அழித்து கொள்ள கூட தைரியம் இருக்கவில்லை.
கால் போன திசையில் நடந்தேன். கடைசியில் வந்து சேர்ந்த இடம் பொது நூலகம்! அங்கு success through positive thinking என்ற நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர் என் வாழ்க்கை முற்றிலும் மாறியது...
Mister stone ன் insurance company of America வில் வேலை வாய்ப்பு கிடைத்தது. பின்னர் எழுத ஆரம்பித்து விட்டேன்....
Mr stone ன் நிறுவன சஞ்சிகையில் success unlimited என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பின் அதனை இரசித்த Newyork publisher ஒருவர் நான் புத்தகம் ஒன்றை எழுதினால் வெளியிட தயார் என்றார்.
18 மாதங்களின் பின் "உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்கள் " எனும் புத்தகத்தை வெளியிட்டேன்.
2 ஆண்டுகளில் 350 000 பிரதிகள் விற்கப்பட்டது. தற்போது சுமார் 14 000 000 பிரதிகள் விற்கப்பட்டுள்ளது.
Hope you all read this book!!!
YOU ARE READING
Talk With Books📖
General Fictionஇது புது வித அனுபவமாக அமையும். நான் படித்த, படிக்க போகும் famous writers ன் புத்தகங்கள் பற்றி சிறிய introduction! இதனால் இப்புத்தங்களை தேடி வாசிக்க உங்கள் மனதை தூண்ட வைக்க செய்யும் முயற்சி. இது உங்கள் வாசிப்பின் கோணத்தை சற்று மாற்றி வாழ்வில் வெற்றி...