தஜ்ஜால்

104 17 25
                                    


கப்றுடைய (புதைகுழி) விசாரணை எவ்வளவு உண்மையோ அதைப் போன்றே தஜ்ஜால் என்பவன் ஒவ்வொருவரிடமும் வருவது நிச்சயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
.
.
.
தஜ்ஜாலை 2 நோக்கங்களுக்காக வேண்டி அல்லாஹ் உலகிற்கு அனுப்புகின்றான்.

1 : எல்லா மனிதர்களையும் பொய்யின் மூலம் வழிகெடுப்பது. எல்லா துறைகளிலும் குர்ஆனுக்கு எதிரான திட்டங்களை பொய்யின் மூலம் நல்லது போன்று மக்களுக்கு அறிமுகப்படுத்தி குர்ஆனுடைய கட்டளைகளுக்கு மாறும் செய்வது. ஹராமை ஹலால் என்றும் ஹலாலை ஹராம் என்றும் எடுத்துக் காட்டி மக்களை சோதனைக்குள்ளாக்குவது.

2 : அவன் ஈஸா (அலை) அவர்களுக்கு நிகராக பொய் ஈஸாவாக செயல்படுவான்.பைபிளில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்பவர் இவர் தான் என்று யூதர்கள் அனைவரும் அவனை ஈமான் கொள்வார்கள்.
.
.
.
ஈஸா (அலை) லுத் என்ற வாசலில் தஜ்ஜாலை கொல்வார்கள்.

பின்னர் யஃஜுத் மஃஜுத் கூட்டத்தினர் அல்லாஹ் கூறியது போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து புறப்படுவார்கள்.

அவர்களில் ஒருவன் "தப்ரியா" எனும் இடத்திலுள்ள சிறு கடலில் உள்ள தண்ணீரை குடிப்பான். கடைசியாக வருபவன் இங்கே ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவான். (அந்தளவு தண்ணீர் முழுவதையும் அவர்கள் குடித்து விட்டனர்.)

பின் அவர்கள் புறப்பட்டு பைத்துல் முகத்தஸ் மலைக்கு ஏறுவார்கள்.
"நாம் பூமியில் உள்ள அனைவரையும் கொன்று விட்டோம். வாருங்கள்! இனி வானத்தில் உள்ளவர்களை கொல்வோம்." என கூறி வானை நோக்கி அம்பு எய்துவார்கள். அவர்களின் அம்புகளை இரத்தம் தோய்த்து அல்லாஹ் திரும்பி அனுப்புவான்.
.
.
.
உடனே ஈஸா (அலை) அவர்களும் அவரது தோழர்களும் அல்லாஹ்விடம் இறையஞ்சுவார்கள். அப்போது அல்லாஹ் ஒரு புழுவை அனுப்புவான். உடனே யஃஜுஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஓரே சமயத்தில் செத்து விழுவார்கள்.
.
.
.
அவர்களின் அம்புகளை விற்களையும் முஸ்லிம்கள் 7 வருடங்கள் விறகுகளாக பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான்.
.
.
.
தஜ்ஜால் மனிதர்களிடம் வரும் முறை.

Talk With Books📖 Where stories live. Discover now