Hassan Ashari 2

36 9 13
                                    

எது சந்தோசம்? எங்கே சந்தோசம்?

அவர் தாராளமான வசதி படைத்த ஏராளமான சொத்துகளுக்கு சொந்தக்காரன். மனதிலே சந்தோஷமில்லை. ஊர் உலகம் எல்லாம் சுற்றினார்.

அமெரிக்காவில் நயகரா நீர்வீழ்ச்சி, இந்தியாவில் தாஜ்மஹால், ஸ்பெயினில் அல்ஹம்றா அரண்மனை...இலங்கையில் செழுமையான குளுமையான பிரதேசங்கள், கிளப்கள்.

இவ்வாறு எங்கும் சுற்றி அலைந்தார் அந்த குபேரர். காலமும் பணமும் விரயமாகியதே தவிர அவர் தேடிய சந்தோஷம் அவருக்கு கிடைக்கவில்லை. மதுவிலும் மாதுவிலும் சந்தோசத்தை தேடிப் பார்த்தார் - மிஞ்சியது சஞ்சலமே!

"உண்மையான சந்தோசத்தை அடைய சிறந்த வழி துறவு மார்க்கம் ஒன்றே" என அவரது நண்பர்கள் சிலர் ஆலோசனை சொன்னார்கள்.

தனது சொத்து செல்வங்களெல்லாம் விற்று பணமாக்கி தங்கம், டாலர், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் முதலான நவரத்தினங்களெல்லாம் சேர்த்து ஒரு கோணிப்பையில் கட்டி எடுத்து கொண்டு ஒரு மெஞ்ஞானயிடம் வந்தார் கோடீஸ்வரன்.

"குருவே! இதோ எனது முழு செல்வங்களையும் இங்கு கொண்டு வந்து விட்டேன். எனது வாழ்க்கையில் சந்தோஷமில்லை. எனக்கு மனநிம்மதிக்கு எனது சந்தோஷத்தற்கு வழி காட்டுங்கள்!" என்று அவர் பணிந்து நின்றார்.

ஞானியோ இவர் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. பையை அவிழ்த்து விரித்து பார்த்தார். கண்ணை பறிக்கும் மாணிக்கங்கள், வைரங்கள்... எல்லாம் வாரிச் சுருட்டிக் கட்டி தலையில் வைத்து கொண்டு ஓடத் தொடங்கினார் சாமி.

"ஆகா! போயும் போயும் ஒரு கள்ள ஆசாமியிடம் அல்லவா மாட்டி கொண்டேன். எனது சொத்துகள் எல்லாம் பறிபோகிறதே" என்று ஏங்கியவராக கோடீஸ்வரன் ஞானியைத் துரத்த தொடங்கினார்.

அவரோ சந்து பொந்துகளெல்லாம் புகுந்து ஓடினார்.

கோடீஸ்வரனுக்கு அவரது ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் இவ்வளவுகாலம் கஷ்டப்பட்டு தேடிய பணமெல்லாம் பறிபோகிறதே என்ற வேகத்தில் விடாமல் விரட்டினான்.

இறுதியாக ஞானி பழையபடி அதே மரத்தடிக்கு வந்து சேர்ந்தார். "இந்தப்பா உனது பணமூட்டை. நீயே வைத்து கொள்!" என்று கூறி ஞானி கோணிப் பையை கோடீஸ்வரனிடம் கொடுத்தார்.

கோணிப்பையை பெற்றுக் கொண்டவுடன் அந்த கோடீஸ்வரன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.

ஞானி சொன்னார்: "நீ என்னிடம் தந்ததை விட ஒரு செம்புகாசு கூட யான் உனக்கு அதிகமாக தரவில்லை. இருப்பினும் நீ முன்பிருந்ததை விட இப்போது வெகு சந்தோசமாக இருக்கிறாய்! இந்த சந்தோஷம் உனக்கு எங்கிருந்து வந்தது?

"நீயாக உனக்குள்ளே உருவாக்கிக் கொள்வது தான் சந்தோஷம்.
வீணாக அதை வெளியில் தேடி அலையாதே!"

இக்கதையும் Hassan Ashari ன் "மனிதன் புனிதமாக" என்ற புத்தகத்தில் உள்ள 105 கதைகளில் ஒன்று!

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 28, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Talk With Books📖 Where stories live. Discover now