பகுதி - 22

2K 99 27
                                    

"ஓஹ்...அது நீ தானா?!"

"அப்போ என்னை உங்களுக்கு ஆல்ரெடி தெரியுமா?"

"தெரியும்டா...நல்லா தெரியுமே"

"பட் எப்படி என்னை உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு...ஷனா சொன்னாளா?"

"சொல்ரேன்..சொல்ரேன் எதுக்கு அவசரப்பட்ற" (என்றவாறே தன் போனில் இருந்த வீடியோவை அவன் பக்கம் திருப்பி காட்டியவன்)
"இதுல இருக்குறது உன்னோட வண்டி தானே" என்றான்.

அதைப் பார்த்து விட்டு அதிர்ச்சியின் உச்சத்தை தொட்டபடியே "ஆமாம் ஆனால் ஷனாவை ஆக்ஸிடன்ட் பண்ணது சத்தியமா நான் இல்லை" என்றான்

"அப்போ எப்படிடா இந்த வீடியோல உன்னோட கார் இருக்கு நீ இல்லாம
அதுவா போய் ஆக்ஸிடன்ட் பண்ணுச்சோ
யாருகிட்டடா கதை விட்ற"

"ஐயோ நான் சொல்ரத தயவு செய்து நம்புங்க
ஷனாவை போய் நான் எப்டிங்க ஆக்ஸிடன்ட் பண்ண முடியும்
இப்போ கூட நான் தான் அவளை கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு வரேன் அதுவும் உங்க கிட்ட தகவல் சொல்லலாம்னு தான் வந்தேன்
அப்படி நான் அவளை ஆக்ஸிடன்ட் பண்ணி இருந்தா எனக்கு என்னனு அப்படியே போய் இருப்பேனே"

"என்னடா லாஜிக்ஆ பேசி நம்ப வச்சிடலாம்னு பார்க்குறியா
இது எல்லாமே உன்னோட ப்ளான்டா ஆக்ஸிடன்டையும் பண்ணிட்டு மாட்டிக்காம தப்பிக்கவும் வேணும்ல அதுக்காக நீ போட்ற ட்ராமா"

"டேய்...யாரப் பார்த்துடா நடிக்கிறனு சொல்ர...அவளை மாதிரி ஒரு நல்ல பொண்ணுக்கு உன்னை மாதிரி ஒரு புத்திகெட்ட ப்ரதர் ஆஹ்..
இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன் கொஞ்சம் கூட சொல்ரத நம்பாம உன் இஷ்டதுக்கு பேசிட்டே போற"

"டேய்.. யாரு இடத்துக்கு வந்து யாருக்கு குரல் உயர்த்தி பேசிட்டு இருக்க
என்னை பற்றி உனக்கு தெரியாது ஒழுங்கா அமைதியா போய் நீ பண்ணின தப்புக்கு என்ன தண்டனை கிடைக்கிதோ அதை சந்தோஷமா அனுபவி அத விட்டுட்டு இப்படி சத்தம் போடுற வேலையெல்லாம் ஏங்கிட்ட வச்சிக்காத"

"பண்ணாத தவறுக்கு நான் ஏன்டா தண்டனை அனுபவிக்கனும்...
அதுவும் இல்லாம நீ சொல்ரத எல்லாம் கேட்டுட்டு வாயை மூடிட்டு இருக்க நான் ஒன்றும் ஷனா கிடையாது
இப்போ தான்டா புரியுது அவ ஏன் உனக்கு அவ்வளவு பயப்பட்டானு
ஏன்னா நீ ஒரு சைக்கோ"

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Tahanan ng mga kuwento. Tumuklas ngayon