பகுதி - 23

1.9K 111 11
                                    

இந்த பொண்ணு கிட்ட அவசரப்பட்டு சரின்னு சொல்லிட்டேன் இப்போ அந்த பிசாசை சமாளிக்க வேண்டாமா!! என யோசித்தபடி ஷீமாவை தேடி நடந்தான் அஹமட்.

அவளோ கையில் துப்பாக்கியோடும் கண்ணில் தீப்பொறியோடும் எங்கேயோ ஒரு திசையை நோக்கி குறி வைத்தபடி பார்வையை கூர்மையாக்கியபடி நோக்கிக் கொண்டு இருக்க
இதைப் பார்த்த அதிர்ச்சியில்

"ஷீமா என்ன பண்ர நீ? " என கத்தியவாறே அவளருகே ஓடினான் அஹமட்.

உடனே கையை கீழே விட்டவள்

"கூல்...கூல் சும்மா தான் போர் அடிச்சது அதான் ஏதாவது பண்ணலாம்னு...
நீ ஒன்றும் டென்ஷன் ஆகாத ஒரு லாயர் கிட்ட துப்பாக்கி கூட இல்லைனா எப்படி
பக்காவா லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கேன்"

"அதுக்குனு போர் அடிச்சா துப்பாக்கியை வச்சிட்டு தான் விளையாடுவியா"

"ஆமாம்..அதெல்லாம் கண்டுக்காத
இப்போ எதுக்கு திடீர்னு என்னை பார்க்க வந்திருக்க"

(நீ என்ன பண்ணா எனக்கு என்ன என நினைத்தவன்)"சரி நான் உடனே விடயத்துக்கே வரேன் அது என்னனா நீ தான் அந்த ஷானோட கேஸை டீல் பண்ரியாமே?"

"ஓஹ் இதான் மாட்டரா...ஆமாம் நான் தான் இப்போ அதனால என்ன?"

"நீ இதுல இருந்து ஒதுங்கிடு ஷீமா"

"ஹஹா..வாட்
ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல இதுல உனக்கு என்ன பிரச்சினை ?
ஆனால் இது நல்லா தான் இருக்கு என்ன இப்படி சொல்ல சொல்லி அந்த சாரா சொல்லி அனுப்பி வச்சாளா?"

"உனக்கு இது தேவை இல்லாத பேச்சு
நான் சொன்னத உன்னால பண்ண முடியுமா முடியாதா?"

"அதெல்லாம் முடியாது..ஷமீனாம்மா தான் இந்த கேஸை எனக்கு டீல் பண்ண சொன்னாங்க
சொன்னதும் எனக்கு எப்படி தெரியுமா இருந்துச்சி அவ்வளவு சந்தோஷம்னா பாத்துக்கோயேன்
சாராவும் ஷானும் சின்ன வயசுல இருந்து ரொம்ப நல்ல ப்ரெண்ஸ்ஆமே?
அப்போ தான் எனக்கு புரிஞ்சது இத வச்சு எவ்வளவு கேம் ஆடலாம்னு
ப்ரெண்ட்ஸ்..அதுவும் சின்ன வயசுல இருந்து ப்ரெண்ட்ஸ்னா அவனுக்கு அடிச்சா அவளுக்கு வலிக்கும்ல..."

காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔Onde histórias criam vida. Descubra agora