💏1💏

17.4K 179 34
                                    

"முடியாது‌. முடியாது. முடியாது. என்னால முடியவே முடியாது ." என நானும் எவ்வளவோ காரணங்களை சொல்லி அம்மாவை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய நிலை தான். ஆனால் நான் இன்னும் இதற்கு தயாராக இல்லை என எனக்கு தோன்றியது.

எனக்கு இன்னும் சில காலம் தேவைப்பட்டது. ஆனால் என் நிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. என் தந்தை எனக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கிறார்.

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. திருமணம் என்று சொன்னவுடன் மனது படபடக்கிறது. ஏதோ இனம் புரியாத பயம் மனதில் குடி பெயர்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எல்லா காரணங்களும் திருமணம் என்பதே வேண்டாம் என என்னிடம் அறிவுரை கூறுவது போல் இருக்கிறது.

இதற்கு காரணம் நான் கண்ட காட்சிகளாக கூட இருக்கலாம்.

இதுவரை நான் பார்த்ததில் அதிகபட்ச தம்பதிகள் திருமணத்தை ஒரு கேடாக தான் நினைக்கின்றனர்.

தான் ஏன் திருமணம் செய்தோம் என வருந்துகின்றனர். இந்த வருத்தத்தில் ஏன் வாழவேண்டும்?

ஒரு சில காரணங்களால் திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் இருக்கிறது என் மனம்.

"இன்னும் எவ்வளவு நாள் இப்படியே சொல்லிக்கிட்டு இருப்ப. இப்பவே 24 வயசு ஆயிடுச்சு. இனிமே போனா உன்னை அரை கிழவின்னு தான் சொல்லுவாங்க" என என்னை சமாதானம் செய்ய முயற்சித்தார்.

" பரவாயில்ல. ஆனா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்."

"இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்... இன்னும் எத்தனை கொஞ்சம் நாள் கேட்க போற"

"அம்மா ப்ளீஸ்...." நான் கெஞ்ச தொடங்கினேன்.

எனது பிபிஏ படிப்பு முடிந்தவுடன் எனக்கு திருமணம் செய்ய நினைத்தனர் ஆனால் நான் மறுத்து விட்டு இரண்டு வருட அனுமதியில் எம்பிஏ படிக்க கோரினேன். ஒரு வாரத்திற்குப் பிறகு அதற்கு அனுமதியையும் பெற்றேன். என் எம்பிஏ முடிந்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என அடம் பிடித்தேன். அதற்காக உண்ணாவிரதமும் இருந்தேன். நமக்கு இருக்கும் வசதிக்கு நீ ஏன் வேலைக்கு  போக வேண்டும் என கேட்க,என் தன்னம்பிக்கையை வளர்க்க என கோரியும் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் என் பெற்றோர்களை இணங்க வைக்க பெரு முயற்சி செய்து வெற்றியும் பெற்றேன்.

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றதுWhere stories live. Discover now