சரண்யா கூறுவது சரியாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். அப்பாக்கு ஆதித்யாவை பற்றி சிறு வயதில் இருந்தே தெரியும். நிச்சயமாக அப்பா எனக்கான தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மாட்டார்.
நான் தான் ஆதித்யாவை பற்றி தவறாக புரிந்து இருக்க வேண்டும். அன்று அவர் எந்த சூழ்நிலையில் என்னிடம் அப்படி நடந்து கொண்டாரோ.அவரிடம் ஒருமுறை பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் எப்படி அங்கு சென்று அவரிடம் நான் பேச வேண்டும் என்று கூறுவது. அவர்கள் என்ன நினைப்பார்கள்.
"தியா, உன் மாமா, அதான் ஆதித்யாவோட அப்பா உன்னை கூப்பிடுறாரு."
"இதுதான் சரியான சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது. எப்படியாவது ஆதியுடன் பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.நான் கூடத்திற்கு சென்ற போது ஆதித்யா அங்கு இல்லை.என் கண்கள் அவனை தேட வலை விரித்தன.
போர்ட்டிக்கோவில் காதில் அலைபேசி உடன் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். ஆதித்யாவின் அப்பா என்னை சோபாவில் உட்கார சொன்னதும் உட்கார்ந்தேன்.
என்னை பற்றி கேள்விகள் கேட்டார். நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் என் கண்களும் மனதும் ஆதித்யாவையே சுற்றிக் கொண்டிருந்தது.
உண்மையிலேயே ஆதி அழகன் தான்.
சிறிது நேரத்திற்குப் பின் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்து விட்டு கூடத்தை வந்தடைந்தான். அவனுடைய கண்கள் என்னைப் பார்த்தன. என் கண்கள் அவனை பார்த்ததும் பார்வையை திருப்பிக் கொண்டான்.
"ஆதித்யாவும் வந்துட்டான். ஒன்னும் பண்ணுங்களேன். ரெண்டு பேரும் தனியா ஏதாவது பேசணும்னுனா பேசிக்கோங்க." ஆதித்யாவின் அப்பா கேட்க என் உதடு புன்னகைத்தது.
"டாட்" என்றான் ஆதித்யா சிடுசிடுப்பாக.
"என்னடா இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறிங்க. ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கணும்ல. அப்ப தானே லைஃப் புல்லா சந்தோசமா இருக்க முடியும்." என ஆதித்யாவின் அப்பா அவனுக்கு கட்டளையிட அவன் எழுந்தான்.
KAMU SEDANG MEMBACA
உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
Romansaசில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட...