💏6💏

5.5K 138 22
                                    

உலகத்தை பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி சிறிது நேரத்திற்கு முன் கண்ட கனவில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த என்னை அறைக் கதவு தட்டும் சத்தம் எழுப்பியது.

கண்களைத் திறக்க மனமில்லாமல் புரண்டு படுத்தேன். சப்தம் வேகமானது. மெதுவாக கண்களை திறந்து மணியைப் பார்த்த போது மணி ஆறு முப்பது.

என் மீது படர்ந்து இருந்த போர்வையை நீக்கி விட்டு கதவை திறந்தேன். மாயா நின்று கொண்டிருந்தாள்.

அவளை கண்டும் காணாததுபோல் கட்டிலில் சென்று அமர்ந்தேன்.

" ஏய் என்ன ஆச்சு? இன்னும் கிளம்பலையா?"

" எங்க கிளம்ப?" நான் குழப்பமாக அவளிடம் கேட்டேன்.

"இன்னைக்கி உன்ன பொண்ணு பாக்க வராங்க. அதுக்கு ரெடி ஆகணும்ல."

" இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? அவங்க பத்து மணிக்கு மேல தான் வருவாங்க. அதுக்கு ஆறு முப்பது மணிக்கு கிளம்ப சொல்ற."

" இப்ப இருந்து கிளம்புனா தான அப்போ ரெடியாக முடியும்."

" எனக்கு அரை மணி நேரம் போதும்." என்று கூறி பாத்ரூமிற்கு சென்றேன்.

இன்னும் கண்கள் சிறிது தூக்கத்தை கேட்க, அதற்கு அனுமதி அளிக்காதவளாய் தண்ணீரை தெளித்து முகத்தை துடைத்துக் கொண்டேன்.

வெளியே வந்து பார்த்தபோது மாயா காபி டம்ளருடன் காத்துக் கொண்டிருந்தாள்.

என் காபி தம்ளரை எடுத்துக் கொண்டு பால்கனியில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். மாயா என்னை பின் தொடர்ந்து சோபாவில் அமர்ந்தாள்.

என்னுடைய கண்களை சூரியனுக்கு விற்று விட்டது போல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

" என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கே?"

" இல்ல. பிரேக்ஃபாஸ்ட்க்கு வர்றேன்னு சொன்னவ பெட் காபிக்கே வந்துட்டியேன்னு தான் பார்க்குறேன்."

"ஏய் இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு எவ்வளவு முக்கியமான நாள். நான் எப்படி வராமலிருப்பேன். அதைவிடு. மாப்பிள்ளை பத்தி கேட்டியா?"

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றதுHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin