வரிசையாக ஊர்ந்து செல்லும் வாகனங்களை பார்க்க கொஞ்சம் சலிப்பாக இருந்தது. பிரம்மாண்டமான நான்கு மாடி கட்டடத்திற்கு வெளியே அமைதியாக காத்திருந்தேன்.
வருபவர்கள் போகிறவர்கள் என எல்லோரும் கொஞ்சம் வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தனர். உள்ளே செல்பவர்களை சோதித்துப் பார்ப்பவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு உறுத்தலாகவே இருந்தது.
இருப்பினும் சரண்யாவிற்காக காத்துக் கொண்டு இருப்பதால் சிறிது ஆறுதலாகவே இருந்தது.
காரை நிறுத்திவிட்டு வந்து இங்கு நின்று 15 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் அவள் வரவில்லை.
அவள் வீட்டில் இருந்து கிளம்பிய பின் தான் நான் கிளம்பினேன். ஆனால் அவள் இன்னும் வந்து சேரவில்லை. எனக்கு சற்று கவலையாகவே இருந்தது.
இதனிடையே என் அலைபேசி ஒலித்தது சரண்யாவாக இருக்க வேண்டும் என நினைத்து அலைபேசியின் திரையைப் பார்த்தேன். திரையும் அவள் பெயரையே பிரதிபலித்தது.
" ஹலோ...."
" ஹலோ தியா, வேர் ஆர் யூ?"
" நான் உனக்காகத்தான் மால்க்கு வெளிய வெயிட் பண்றேன்."
" வெளிய வா...! சாரி... சாரி... நான் வந்துட்டே இருக்கேன். மாயா உள்ளதான் இருக்கா. அவளோட ஜாயின் பண்ணிக்கோ. I will be there in 10 மினிட்ஸ். ஓகே பாய்."
சரண்யாவின் தொடர்பை துண்டித்து விட்டு உள்ளே செல்ல ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.
என்னை பார்த்ததும் காவலில் நின்ற பெண் சிறிது புன்னகையைச் சிதறிவிட்டு உள்ளே பெண்களை மட்டும் பரிசோதிக்கும் அந்த பிரத்யோகமான அறையை திறந்து விட்டு உள்ளே இருந்த பெண்ணிடம் ஜாடை காட்டினாள்.
அவள் ஜடையை புரிந்துகொண்டு எனக்கென தனி கவனம் கொண்டு சோதித்தாள். சாதாரணமாக அவள் செய்யும் சோதனையை விட சிறிது அதிக நேரம் எடுத்துக் கொண்டாள்.
என்னிடம் தவறாக எந்த பொருளும் இல்லை. இவர்கள் இப்படி இருப்பதிலும் வியப்படைய எதுவுமில்லை.
YOU ARE READING
உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
Romanceசில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட...