இரவு முழுவதும் தூங்காமல் கண்கள் சிவந்து இருந்தன.
மனதில் உள்ள காயங்களை மறைக்க முடியாமல் என் முகம் காட்டிக்கொடுத்தது.
" தியா சாப்பிட வாமா.." என சஞ்சய் அண்ணாவின் அம்மா அழைக்க அவர்களை வருத்தப்பட வைக்க விரும்பாமல் எழுந்து குளியலறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு அழுத தடயங்களை மறைக்க சிறிது பவுடர் போட்டு விட்டு டைனிங் ஹாலுக்கு சென்றேன்.
நான் செல்லும்போது அந்த வீட்டிலிருந்த அனைவரும் அமர்ந்திருந்தனர்.
ஆதித்யா விற்கும் தாத்தாவிற்கும் இடையே மட்டும் இடம் காலியாக இருக்க வேறு வழியின்றி அதில் அமர்ந்தேன்.
கேரள பாரம்பரிய உணவுகள் டைனிங் டேபிளை அலங்கரித்து வைத்திருக்க, நானும் ஆப்பத்தை மட்டும் எடுத்து தட்டில் வைத்தேன்.
தொண்டைக்குழிக்குள் உணவு இறங்க மறுத்தது. அதை விட ஆதித்யாவின் பார்வை வீச்சு என் மேல் படர வெறுப்பாக இருந்தது. எல்லோர் முன்னிலையிலும் ஆதியை விட்டு கொடுக்க மனமின்றி அமைதியாக உண்ண முயற்சித்தேன்.
ஆனால் ஆதித்யா அதை கெடுக்கும் வகையில்
" தியா இதை ட்ரை பண்ணி பாரு. கேரளா ஸ்பெஷல் என் புட்டை எடுத்து என் தட்டில் வைத்தான்.
ஒருவேளை அனைவரின் முன்னிலையிலும் நான் ஏதாவது பேசுவேன் என நினைத்தானோ என்னவோ ஆனால் என் பொறுமைக்கும் ஒரு எல்லை தான்.
அவன் என்னிடம் அக்கறையாக பேசும்பொழுது மனம் மகிழ்வதற்கு பதில் நேற்று அவன் கூறிய ஐ லவ் யு ஸ்வே குட்டி ஞாபகத்திற்கு வர கண்கள் கலங்க ஆரம்பித்தன. இதற்கு மேல் முடியாது என எழுந்து விட்டேன்.
"தியா ஏமா சாப்பிடாம எழுந்துட்ட?" அண்ணாவின் அப்பா அக்கறையாக கேட்டார்.
"இல்லப்பா இந்த மாதிரி சாப்பாடெல்லாம் இதுக்கு முன்னாடி சாப்பிட்டதில்லை. டிஃபரண்ட் இருக்கு. அதான் ஒருமாதிரி இருக்கு. எனக்கு இது போதும் வயிறு நிறைஞ்சுருஞ்சு. என ஆதியின் கலங்கிய கண்களை பார்த்தும் என் கலங்கிய மனதையும் கலங்கடித்தவனை பற்றியும் சிறிதும் நினையாமல் அறைக்கு வந்துவிட்டேன்."
YOU ARE READING
உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
Romanceசில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட...