" தியா தியா அவங்க வந்துட்டாங்க"
"என்ன சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்களா?"
"ஆமா. வா நாம போய் பார்க்கலாம்."
"இல்ல நான் வரல. அம்மா வந்து கூப்பிட வரைக்கும் நான் வர கூடாதுன்னு சொல்லி இருக்காங்க."
"அப்போ நான் போய் பாக்குறேன்."
மாயா ஒரு நொடியில் பறந்து விட என் மனதுக்குள் சிறகுகள் அடித்தன. அவன் வந்து விட்டான். எனக்கும் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. மறைமுகமாக பார்ப்பதைப் பற்றி சரண்யா கூறியது நினைவுக்கு வந்தது. பார்க்கலாமா? வேண்டாமா ? அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே போனது. மறைந்திருந்து பார்க்க எண்ணினேன். துணிந்து எழுந்த போது அமைதியாக உள்ளே வந்த மாயாவை பார்த்தேன்.
"என்ன ஆச்சு?"
"அவ்ளோதான் தியா.உன் லைஃப் முடிஞ்சிருச்சு. உன்ன நெனச்சா பாவமா இருக்கு."
"ஏண்டி? ப்ளீஸ்.... என்னை பயமுறுத்தாத. எதுவாயிருந்தாலும் சொல்லு."
"அது எப்படி நான் சொல்லுவேன். ஆனா உங்க அப்பா உன்ன நல்லா மாட்டி விட்டுட்டாரு டி."
"ப்ளீஸ் மாயா. என்ன விஷயம்னு சொல்லு." என் மனதில் பற்பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.
"நீ அந்த பையன கல்யாணம் பண்ணுனா கிளிய வளர்த்து குரங்கு கையில் கொடுத்த மாதிரி இருக்கும்.
அதனாலதான் உங்க அப்பா போட்டோ காட்ட இல்லைன்னு நினைக்கிறேன். உன் அப்பா ப்ரில்லியண்ட் ன்னு சொல்லும் போதே நாம கெஸ் பண்ணி இருக்கனும்."
மாயா பேசும்போது வார்த்தௌக்கு வார்த்தை விட்ட இடைவெளி என் இதயத்தை துளைத்துக் கொண்டிருந்தது.
"மாயா என்னன்னு சொல்லு."
"தியா அவன் எப்படி இருக்கான் தெரியுமா? பெரிய கண்ணு. அந்த பெரிய கண்ணை இன்னும் பெருசா காட்ட சோடாபுட்டி கண்ணாடி.
இவ்வளவு ரிச்சா இருக்கான் ஒரு லென்ஸ் வைக்கலாம்ல.இல்லேனா நல்ல ஸ்பேக்ஸ்ஸாவது வாங்கலாம்.
YOU ARE READING
உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
Romanceசில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட...