கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

50 3 2
                                    

வீட்டிற்குள் வரும்போதே சத்தமிட்டு கொண்டு வந்தான் மணி

மணி :எம்மா எவ்வுட இருக்கினா டி

அம்மா :லே ஏம்புல சத்தம் போடுஆ.

மணி :செம்பருத்தி எவ்வுட

அம்மா :அவ வடக்கபுறத்துல பாத்திரம் மழக்கா

மணி :சரி சரி . இண்ணைக்கு பயலுவ குளத்துல மீன் பிடிச்சானுவ நான் எனக்கு ரெண்டு மீன் எடுத்து வைக்க சொன்ன அதான் நல்லா வல்லிய மீனா வச்சிருக்கானுவ.இந்தா டி இதை நீ கழுவி வை நான் கொளத்துக்கு போய் குளிச்சண்டு வருண

அம்மா :எனக்கு இத்தர வலிய மீன வெட்ட கழிவில்ல மக்கா.

அப்போது செம்பருத்தி உள்ளே வந்தாள்

மணி :அங்கனயா சரி செம்பருத்தி இந்த மீன நல்லா கழுவி மசாலா போட்டு வை நான் குளிச்சண்டு வருண

செம்பருத்தி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்

மணி :எந்துராக்கும் நினக்கு. சொல்லு

செம்பருத்தி :அது இத்தர வலிய மீன அறுக்க அறிஞ்சுட.

அம்மா :லே என்னல குட்டிய பாரு அந்த மீனுக்க கனம் கூட காணாது அவளை போய் இத அறுக்க சொன்னா அவ எங்கனயாக்கும் அறுப்பா.நீ அறுத்து கொடுத்தண்டு போ மக்கா.

மணி : சரி சரி நான் அறுக்குண எனக்கு யாரு வெள்ளம் கோரி தருவா.

செம்பருத்தி :நான் வீத்தி தராம்.

அம்மா :சரி மக்கா நான் போய் அந்த ஜெம்பர்க்கு அளவு துணி குடுத்துட்டு வர்றேன்

அம்மா சென்றுவிட இருவரும் மீனை கழுவ ஆரம்பித்தார்கள். மணி திடீரென்று சிரிக்க ஆரம்பித்தான்

செம்பருத்தி :எதுக்காக்கும் சிரிக்கிங்க

மணி :இல்ல நானும் தங்கச்சியும் இருந்தபோ கூட நானாக்கும் மீன வெட்டவும் கழுவவும் செய்வேன். அப்ப நான் செல்லுவ நெனக்க அண்ணிக்கும் நான் இங்கனதான் செய்வேன்னு அத நினைக்கும்ப சிரிப்பு வருது.

சில்லுக்கருப்பட்டி (On Hold )Where stories live. Discover now