காலையிலேயே மிகவும் பரபரப்பாக இருந்தான் மணி. கிட்ட தட்ட ஒரு மாதம் உருண்டு ஓடியது. இன்று செம்பருத்திக்கு மாதாந்திர பரீட்சை. அதான் மணி பரபரப்பாக இருந்தான்.
மணி :குட்டி என்ன செய்யா இண்ணைக்கு பரிச்சை இருக்குன்னு சொன்னாலா இன்னும் கிளம்பலயா. செணம் வா குட்டி
செம்பருத்தி :இன்னா வருண. எந்துரு அவசரம் நெங்களுக்கு இப்படி நித்தம் என்ன அவரபடுத்தி என்னும் நானாக்கும் முதல்ல போணது.
மணி :குட்டி முதல்ல போணது குத்தமில்ல. நேரம் தவறி போறதாக்கும் குத்தம்.
செம்பருத்தி :போறது பின்ன. எல்லாம் கையில இருக்கா என்ன
மணி :எடுத்தாச்சு பின்ன நீ பென்னு பென்சிலு எல்லா எடுத்தாயா
செம்பருத்தி :நான் எல்லாம் எடுத்தாய் நெங்களுக்க லஞ்ச் பாக்ஸ் எவ்வுட
மணி :நான் கார்லு வச்சாய் நீ வா போவாம்
செம்பருத்தி :பின்ன என்ட்ட இருக்கினது எந்துராம் அத்தை இருந்தவரைக்கும் கொள்ளாம். இப்போ பச்ச பிள்ளை கணக்கா லஞ்ச் கூடைய மறக்கிங்க. இன்னாங்க உங்களுக்க லஞ்ச் பாக்ஸ்.அவியலும் புளிக்கறி அப்புறம் ஏத்தம் பழம் வச்சிருக்கேன்
மணி :பரிச்சைல கேப்பான் புருஷனுக்கு என்ன உச்சைக்கு கட்டி கொடுத்தன்னு.
செம்பருத்தி :கேட்டா எழுத வேண்டியது தானே
மணி :நல்லா பேசு. ஆமா ஹால் டிக்கெட் உண்டா இதுக்கு
செம்பருத்தி :இல்லை செமஸ்டர் பரிச்சைக்குதான் அது வேணும். எனக்க கதைய விடுங்க இண்ணைக்கு முழு சாப்பாடையும் சாப்பிடணும்.
மணி :எனக்க மொத அம்மைய சமாளிக்காம் போல இந்த குட்டி அம்மைய தான் என்னால சமாளிக்க முடியல
செம்பருத்தி :பின்ன ஒரு அம்மையாவது கண்டிக்கணுமே. அம்ம அப்பன்னு சொன்னா ஐஸ் வச்சா கணக்கு இல்லை இண்ணைக்கும் டிபன் பாக்ஸ் காலியா வராம முழுவனே வன்னு பின்ன நான் சாப்பிட மாட்டேன். பின்ன சாப்பிடலன்னா மேலு களியாம போவும் மேலுக்கு எந்துராவது ஆனா பின்ன எந்த வேலையும் செய்ய முடியாது படிக்க முடியாது கடைசியில பரிச்சைலயும் தோக்கணும் பிறவாயில்லை நீங்க சாப்பிடலன்னா நான் எப்படி சாப்பிட ஆயிரம் இருன்னாலும் நீங்க எனக்க புருஷன் இல்லையா
YOU ARE READING
சில்லுக்கருப்பட்டி (On Hold )
Non-Fictionசில்லுகருப்பட்டி இதுக்குன்னு ஒரு தனிசுவை இருக்கு அதே சுவை இந்த கதைக்கும் இருக்கும் அப்டினு நினைக்கிறேன்.