மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

51 3 2
                                    

ஒரு மாதம் கழித்து இதோ நமது செம்பருத்தி கல்லூரிக்கு செல்லும் நாள் வந்தது.

மணி :செம்பருத்தி நேரம் ஆவு கிளம்பியாச்சா மொத நாளே லேட்டா போவியோ செணம் வா

அம்மா :லேய் ஏம்புல சத்தம் போடுஆ.அவ வருவா

செம்பருத்தி கிளம்பி வந்தாள்.நெற்றியில் குங்குமம் தலையில் பூ. காலில் மெட்டி காலேஜ் யூனிபார்ம் தாலி இதெல்லாம் சேர்ந்து வந்து நின்ற மணி அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

செம்பருத்தி :யா என்ன அங்கன பாக்கிங்க கொஞ்சம் காமெடியா இருக்கோ

மணி :எம்மா யூனிபார்ம்ல ஸ்கூல் பிள்ளை மாரி இருக்காமா.  பின்ன என்ன யாரும் ஸ்கூல் பிள்ளைய கல்யாணம் கட்டுனியான்னு கேக்காம இருந்தா சரி

அம்மா :நீ சும்மா கிடல. மக்கா நீ நல்லா அழகா  இருக்க எந்து. இன்னா சோறும் வெள்ளமும் பசிச்சு கிடைக்காத எந்து இந்தா நூறு ரூவா அங்க போய் பசிச்சா எதாவது வாங்கி சாப்பிடு

செம்பருத்தி :சரி அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க

அம்மா :நீ நல்லா இரு நல்ல முறைல படிச்சு நாள் மார்க்கு வாங்கணும் எந்து.

செம்பருத்தி :சரி அத்தை

மணி :என்ன செம்பருத்தி என்ட்ட எல்லாம் ஆசிர்வாதம் வாங்க மாட்டியோ

செம்பருத்தி :அங்கன ஒண்ணுமில்ல என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க

மணி :ஏட்டி ஏட்டி நான் சும்மா சொன்ன. நல்லா படி எந்து இப்போ காலேஜ்க்கு போவோமா

செம்பருத்தி :போயிட்டு வர்றேன் அத்தை

அம்மா :சீக்கிரம் வா எந்து இன்னு நான் மெட்ராஸ்க்கு  போணும்லா (குழப்பிக்காதிங்கோ இங்க இருக்கவங்க தான் சென்னைன்னு சொல்வோம் ஊருல இதுவரை நான் பார்த்த யாரும் என்ன பாத்து சென்னை ல இருந்து வர்றியான்னு கேட்டது இல்லை எல்லாரும் குட்டி மெட்ராஸ்ஸா அப்படி தான் கேட்ருக்காங்க அதான் நானும் மெட்ராஸ்ன்னு எழுதுன  ).மக்கா இரு நான் போய் எதுப்புக்கு ஆள் கூட்டிட்டு வர்றேன் (எதுப்பு அப்டினா வீட்ட விட்டு எதாவது நல்ல காரியம் இல்ல முக்கியமான காரியத்துக்கு வெளிய போனோம்னா யாரையாவது எதிர்க்க வர சொல்வாங்க. மோஸ்ட்லி சின்ன பசங்க வருவாங்க. )

சில்லுக்கருப்பட்டி (On Hold )Where stories live. Discover now