அம்மா அந்த ப்ளூ சட்டை எங்க இருக்கு என்று கத்திகொண்டே அங்கு நன்றாக இருந்த நாலைந்து சட்டைகளை கலைத்துக்கொணடிருந்தான் மணிகண்டன்
என்னடா உனக்கு கண்ணு முன்னாடியே இருந்தாலும் கண்ணுக்கு தெரியாது இப்படி எல்லாத்தையும் கலைச்சு போட்டாச்சு . இப்படி நாளைக்கு வர்றவ கிட்ட கேளு நல்லா வாயிலயே போடுவா. என்று அர்ச்சனை செய்துகொண்டே அவன் கேட்ட சட்டையை எடுத்து கொடுத்தார் லட்சுமி.
அம்மா நீ வேற பொண்டாட்டி என்ன பண்ணாலும் உன் பிள்ளை மண்டைய மண்டைய ஆட்டிட்டு உன்ன தொரத்தாம இருந்தா சரி என்று வம்பிளுத்தபடி வந்தாள் தங்கை ஜோதி.
ஏன் டி அவனை இப்படி சொல்லுற . எம்பிள்ளை அப்படியெல்லாம் பண்ண மாட்டான்.ஜோதியிடம் காபி கொடுத்தார் லட்சுமி
அப்படி சொல்லு என்னோட செல்ல அம்மா. என்று சிறிது ஜோதியை வெறுப்பேற்றினான்.
ஜோதி மச்சான் எப்போ வருவாரு.இப்போ வந்துருவாருண்ண. சரி நீ இரு குழந்தை எழுந்துக்குறதுக்குள்ள நான் டிரஸ் போட்டு விட்டுடிறேன்.என்று தன்னுடைய ஒரு வயது மகன் விக்னேசை பார்க்க சென்றாள் ஜோதி.
அப்போது அங்கே செல்வம் வந்தான். செல்வம் வேறு யாரும் அல்ல. ஜோதியின் கணவன்தான்.
என்ன மச்சான் செம்மையா ரெடி ஆகிட்டிங்க போல. நானும் இப்படித்தான் ரெடி ஆனேன் ஹீரோ மாதிரி. இப்போ பாருங்க டயபர் வாங்க விட்டுட்டா.கல்யாணத்துக்கு முன்னாடி நம்மள குழந்தை மாதிரி பத்துப்பேன்னு சொல்வாங்க.அப்புறம் தான் அதுக்கு அர்த்தம் தெரியும் அவங்க சொல்றததான் நம்ம செய்யணும் நம்ம செய்ய நினைக்கிறத செய்ய விடமாட்டாங்கன்னு செஞ்சா அடி வெளுத்துருவாங்க . என்று தன்னிலையை பாவமாக கூறிகொண்டிருந்தான் செல்லம்.
மச்சான் உங்க பின்னாடி ஜோதி ஏதோ சொல்லணும்ன்னு ரொம்ப நேரமா நிக்கிறா என்ன விஷயம்ன்னு கேளுங்க.என்று மணி கண்ணை காட்ட.சற்று பயத்துடன் திரும்பியவன் அங்கு யாரும் இல்லாததை கண்டு நிம்மதி அடைந்தான்.
KAMU SEDANG MEMBACA
சில்லுக்கருப்பட்டி (On Hold )
Nonfiksiசில்லுகருப்பட்டி இதுக்குன்னு ஒரு தனிசுவை இருக்கு அதே சுவை இந்த கதைக்கும் இருக்கும் அப்டினு நினைக்கிறேன்.