துவக்கம் மாங்கல்யம்

79 6 4
                                    

அம்மா :லேய் எங்கல போணா நீ

மணி :அம்மா நம்ம தினேஷ்க்கு நாள கல்யாணம்லா அதான் நான் கறிக்கா வெட்டுணதுக்கு போண

அம்மா :லேய் என்னல செல்லுணா நீ. வருன்ன வெள்ளியாச்ச நெனக்கும் கல்யாணம் தானா. நாலு நாள்தான் இருக்கினு நெஞ்ச கல்யாணத்துக்கும். நீ ஒண்ணும் மோந்தி (இரவு )நேரம் போவான்டா

மணி :எடி ஏண்டியா நெனக்கு. இங்க பின்னதான அவனுக்க வீடு இருக்கினு நான் போய்ட்டு ஒத்தஓட்டத்துல வந்நுடா

அம்மா :சரி மக்கா நீ போய்ட்டு செணம் வன்னுடு எந்து

மணி :ஆ வரா வரா. நீ கதவை அடைச்சிட்டு உறங்கு.

அம்மாவிடம் சொல்லிவிட்டு மணி அவன் நண்பன் வீட்டுக்கு சென்றான். கறிக்கா வெட்டுவது என்றால் கல்யாணத்துக்கு தேவையான காய்கறிகளை வெட்டுவது.

சதீஸ் :லே இங்க பாரு ல. அடுத்த கல்யாண மாப்பிளை வாரான்

மணி :லே சும்மா இருங்கல. ஆமா தினேஷ் எவ்வுட.ஆளை கண்டில்ல

சதீஸ் :அது. அந்த குட்டி இப்போதான் போன்ல விழிச்சு அதான் அந்நேரு அன்னா நின்னு பேசிட்டு இருக்கினா

மணி:ஓ அங்கனையா.

சதீஸ் :லேய் உனக்கு ஒண்ணும் போன் வரலையா

மணி :எங்கல அவள்ட்டபேசுறதே பெரிய கஷ்டமா இருக்கு. அவங்க அப்பாட்ட மட்டும்தான் போன் இருக்கு.அவங்க வந்த பிறவு எனக்கு போன் பண்ணுவா. அவங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்ல

சதீஸ் :பின்ன நீ ஒரு புது போன் வாங்கி குடேம்பல

மணி :நான் வாங்கி வச்சிருக்கேன்ல அவள்ட்ட தரலான்னு பாத்தா அவளுக்க வீட்ல கல்யாணத்துக்கு முன்ன நான் தர்றத வாங்க கூடாதுன்னு சொல்லிட்டாங்கல அதான் அவளும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா.

சதீஸ் :அட கடவுளே. அத விடல மக்கா இனி ஒரு வாரம் கழிச்சு நெனக்க வீட்ல தானே இருக்க போறா. இன்னா பாரு வாரான் புது மாப்பிளை

மணி :என்னல பேசியாச்சா தினேசு

தினேஷ் :பேசியாச்சு பேசியாச்சு

சில்லுக்கருப்பட்டி (On Hold )Tahanan ng mga kuwento. Tumuklas ngayon