தன்னை சுபத்ரா பார்ப்பதை தனது கம்ப்யூட்டர் திரை வழியாக பார்த்த ஜிஷ்ணு சட்டென்று சுழல் நாற்காலி யோடு திரும்பி சுபத்ராவை பார்க்க, மாட்டிக்கொண்ட பயத்தில் தனது கம்ப்யூட்டரின் வெற்று திரையை உற்று நோக்கினாள்.
"எவ்வளவு நேரந்தான் அந்த வெறும் திரையை பார்ப்பாய்?... அதுல அப்படியென்ன தெரியுது?.. கொஞ்சம் இந்தப்பக்கம் திருப்பினா, நானாவது திரையில் தெரிவேன்..." என்று கூறி ஜிஷ்ணு மேலும் சிரித்தான்.
சுபத்ராவோ ஜிஷ்ணு பேசியது எதுவும் காதில் விழாதது போல் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தாள்...
சுபத்ராவின் இந்த செயல் ஜிஷ்ணுவை லேசாக தயங்க வைத்தது. "போதும்டா இதுக்கு மேல வேண்டாம்.. ஓடிடப் போறா!..' என்று அவன் மனசாட்சி எச்சரித்தது...
உடனே அவனது மூளை "போடா டேய்! அவளா ஓடுவாள்?!! இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் திரட்டி உன் மண்டையில "நங்ங்ங்க்" குன்னு கொட்டபோறா..." என்று பீதியை கிளப்பியது.
"அச்சச்சோ!!!... மானம் போயிடும் டா ராசா! அடக்கி வாசி!' என்று எச்சரித்தது மனசாட்சி...
அவனுக்குள் இவ்வளவு அக்கப்போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இது எதையும் கவனிக்காதவளாக சுபத்ரா, அந்த கம்ப்யூட்டரில், அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் விபரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
'சுபத்திரா அத்தனை சீரியஸாக என்ன பார்க்கிறாள்?' என்பதை பார்த்த ஜிஷ்ணு, தானும் வேலையின் மீது கவனத்தைத் திருப்பி,
"இந்த விபரங்களை எதுக்காக பார்க்கிறன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டான்.
"யார் யார் என்னென்ன பதவியில் இருக்கிறாங்க?.. அவங்களுடைய வேலை என்ன? என்பதை தெரிஞ்சுகிட்டா அவங்களிடமிருந்து நம் அலுவலகம் சம்பந்தமான விபரங்களை தெரிந்துகொள்ள உதவும்..." என்றவளை
'பரவாயில்ல வேலையில் ரொம்ப ஈடுபாடோடுதான் இருக்கிறா!' என்று அவளைப் மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.