அதுவரை, 'தான் பேயாக நடித்து, ஜிஷ்ணுவிடம் மாட்டியதை எண்ணி, கண்களில் கண்ணீர் வரும் அளவு வருந்திய, சுபத்ரானு ஒருத்தி இங்கே இருந்தாளே எங்கே?' என்று நான் தேட,
சுபத்ராவோ உலகத்தில் உள்ள அத்தனை மகிழ்ச்சியையும் குத்தகைக்கு எடுத்தவளைப் போல், ஜிஷ்ணுவை பார்த்து, முகமெல்லாம் பல்லாக நின்றிருந்தாள்.
விஷ்ணுவுக்கு ஆச்சரியமாகிவிட்டது...
'ம்ம்?!..நான் வரும்பொழுது இவள் கவலையுடன் இருப்பது போலிருந்ததே?' என்று மனதில் எழுந்த கிண்டல் கண்களில் தெரிய ஜிஷ்ணு, சுபத்ராவின் முகத்தை கூர்ந்து பார்த்தான்,
'இப்ப எதுக்கு இவன், குறுகுறுன்னு பார்க்கிறான்?' என்று சுபத்ரா ஜிஷ்ணுவின் கண்களைப் பார்க்க,
அவன் பார்க்கும் பார்வையில், தன்னுடைய ஒவ்வொரு செல் லும் சந்தோஷத்தில் மலர்வதை உணர்ந்தாள்.
என்ன மாயம்! அதுவரை சிரித்தபடி இருந்த சுபத்ராவின் முகம், அப்படியே உறைந்து, ஜிஷ்ணுவின் பார்வையில் தன்னை முழுவதும் தொலைத்தவளாக சிலையென நின்றாள்...
அவன் கண்களிலிருந்து, கண்ணை எடுக்க முடியவில்லை அவளுக்கு...
சுபத்ராவின் முகபாவம் மாறி, தன்னை மறந்து, அவனை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவனுக்கு, இதயத்துடிப்பு வேகமெடுத்தது...
'என்ன? இவளுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் முகத்தில் பாவனை, மாறி மாறி வருது?' என்று அவள் முக பாவனையில் லயித்தவன்,
மேலும் காதல் பொங்க அவளை பார்த்தான்...
ஜிஷ்ணுவின் காதல் பார்வை அவளை மெல்ல மெல்ல அவன் வசம் இழுத்தது... எங்கே கண்ணை சிமிட்டி விட்டால் ஜிஷ்ணுவின் கண்களை பார்க்க முடியாது போய்விடுமோ?' என்று கண்களை சிமிட்டக்கூட இல்லை...
"சுபா! சுபாஆஆஆ! அவன்தான் பார்க்கிறான்னா! நீயும் இப்படி அவனையே வெறிச்சு பார்த்துக்கிட்டு நிக்கிற? இந்த மாதிரி நேரத்தில் பெண்கள் வெட்கப்பட்டு தலையை குனிஞ்சுக்கனும்" என்று சுபத்ராவின் உள்ளுணர்வு குரல் எழுப்ப,