💖7💖

582 30 42
                                    

மோகினி பேயாக அலைந்தது, ஒரு பெண்ணும், நான்கு சிறுவர்களும் என்று அறிந்து கொண்ட ஜிஷ்ணு, அவர்களிடம் விசாரிப்பதற்காக தன் வீட்டிற்கு அழைத்தான். அவ்வாறு செல்வதற்காக, காய்கறி வண்டியில் ஏறும் பொழுது, அந்தப் பெண்ணின் கைப்பையில் இருந்து காய்கறிகள் கீழே விழுந்தன. அதை ப் பார்த்த விஷ்ணுவிற்கு அந்த காய்கறிகள் அவன் தோப்பில் விளைந்தது என்று தெரிந்து கோபம் கொண்டான்.

"திருட்டு பசங்களா டா நீங்க?" என்று ஜிஷ்ணு கோபமாக கேட்டதும்,

அந்தப் பெண்ணுக்கு கோபம் வந்து, தன் வெள்ளை அங்கியில் இருந்து வெளியேவர,

'அவள் அந்த ஊர் பெரியவர் சுப்பிரமணியத்தின் பேத்தி!' என்று ஜிஷ்ணுவிற்கு தெரிந்து, ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகிறான்.

அவன் அண்ணன், ஊர் பெரியவர் சுப்பிரமணியத்தை பற்றி சொன்னது ஜிஷ்ணுவின் ஞாபகத்திற்கு வந்தது.

'தங்கள் தோப்பில் விளையும் காய்கள் மற்றும் கனிகளில், ஊர் பெரியவர் சுப்பிரமணியத்துக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பதும் ஞாபகத்துக்கு வர, அந்தப் பெண் எதற்காக 'இந்த காய்கள் அவ வீட்டிற்கு வர வேண்டியவை தான்' என்று சொன்னாள். என்பது ஜிஷ்ணுவுக்கு புரிந்தது.

என்னதான் உரிமை இருந்தாலும், இந்த காய்களை நேரில் வந்து வாங்காமல், இது போல் இரவு நேரத்தில், யாருக்கும் தெரியாமல் எடுத்துச்செல்வது ஜிஷ்ணுவிற்கு தவறாக தோன்றியது.

"உரிமை இருந்தா, நேரடியா காலையில, தோப்புல வந்து வாங்கிக்க வேண்டியதுதானே? யாருக்கும் தெரியாம எதுக்கு ராத்திரி நேரத்துல வரணும்?" என்று அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி கேட்டான் ஜிஷ்ணு.

"நியாயப்படி இந்தக் கேள்வியை நீங்க உங்க தோப்பு சூப்பர்வைசர் கிட்ட கேட்கணும்..." என்றாள் எங்கேயோ பார்த்த வண்ணம்.

'தங்கள் தோப்பின் சூப்பர்வைசர் ஆல் இந்தப் பெண்ணிற்கு ஏதோ வகையில் பிரச்சனை இருக்கிறது' என்று புரிந்து கொண்ட ஜிஷ்ணு,

நீ வந்து தங்கிய நெஞ்சில்...Dove le storie prendono vita. Scoprilo ora