விஷ்ணுவிடம் பேர்சனல் செகரட்ரி வேலைக்கு சேர்வதில் சிறு தயக்கம் காட்டிய சுபாவை தைரியப் படுத்தினான் ஜிஷ்ணு.
'சரி இந்த புதன்கிழமை நீ வந்து வேலைக்கு சேர்ந்ததுடு" என்று கூறிவிட்டு, சுபாவிடமும் அவள் தாத்தா, அப்பத்தாவிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினான் ஜிஷ்ணு.
தாத்தா
"நல்ல பையனா தெரிகிறார்.... வீடு வரைக்கும் வந்து கூப்பிடுகிறார்... நீ போய் பாரு! வேலை புடிச்சிருந்தா தொடர்ந்து போ! நீ வேலைக்கு போகணும்ன்னு கட்டாயமில்லை புரியுதா சுபா?' என்று கேட்டார் தாத்தா.
"சரி!" என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்ற சுபாவிற்கு, முடிவெடுக்க முடியாமல், யோசனையாக இருந்தது....
'என் பக்கம் நியாயம் இருந்தாலும், அவனைப் பொருத்தவரை நான் செய்தது திருட்டு வேலைதானே? அப்படி இருக்கும்போது, அவங்க அலுவலகத்தில், அதுவும் தன் அண்ணனுக்கு பர்சனல் செக்கரட்ரி யாக எப்படி நியமித்தான்? இதில் வேறு ஏதாவது உள்குத்து இருக்குமோ?' என்ற சந்தேகம் கொண்டாள்.
"போய் பார்ப்போம்! ஏதாவது வித்தியாசமாக தெரிந்தால் வந்திடுவோம்! இருந்தாலும் இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு சுபா!" என்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டாள்.
தன் அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில், 'தான் எப்படி இருக்கிறோம்? என்று பார்த்தாள். ஒரு செக்கரட்டரிக்குரிய தோற்றம் என்கிட்ட இருக்குதா என்ன?' என்று தன்னைத்தானே முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.