💞தேடல் 04💞

44 1 0
                                    

All of you sorry for the late update..

திக் திக் திக்.........

நானு சின்னய்யா னு கத்திக்கிட்டே விழ அப்புறம் நானு அப்படியே மூர்ச்சை ஆயிட்டேன்...

அப்போ நேரம் நடு ஜாமம்.. இருந்தருக்கும்னு நெனைக்குறேன்...என்னால கண்ண தொறக்க முடியல மாராப்புல்லாம் கிழிஞ்சி எல்லா இடத்துலையும் ஒரே இரத்தம்.. கண்ணீர் வந்துட்டே இருந்துச்சி.. மனசுபூரா என் சின்னய்யாவோட பிம்பம்.. அவரோட சிரிப்ப திரும்ப பாக்க மாட்டேனோன்ற பயம்.. அவுக (சின்னையா) சிரிச்சா கன்னத்துல குழி விழும்.. அவுக வந்தப்ப அவுக முகத்தைகூட பாக்கல தள்ளி நின்னு பார்த்தப்போ அவுக சிரிச்சி குழி விழுந்த கண்ணத்தை மட்டும் தான் பாக்க முடிஞ்சிச்சி... அம்புட்டு அழகா இருப்பாக என்னோட சின்னய்யா...💞

சின்னய்யா நீங்க எனக்கு கெடச்சிடுவிங்க தான.. நீங்க இல்லனா நான் என் உசுர விட்ருவன் சின்னய்யா... 😭😭😭வலி தாங்கல சின்னய்யா அடி வயிற்றை கிழிச்ச மாதிரி ஒரு வழி சின்னய்யா.. ரொம்ப முடியல கண்ணுல கண்ணீர் அடக்க முடியல நீங்க எங்க இருந்தாலும் நான் உங்கள கூட்டிட்டு போவேன்...

இதையெல்லாம் நானு வாய் விட்டு முனகிட்டு இருந்தேன்...

தண்ணீல ரொம்ப நேரம் இருந்ததுனால என்னோட சரீரம் (உடல்) நடுங்க ஆரம்பிச்சிடுச்சி அதிகப்படியான குளிரால கை கால் எல்லா விரைச்சி சுத்தமா நினைவு இல்லாம ஆயிடுச்சி எனக்கு தெரிஞ்சி இது என்னோட கணிப்பு தான் ஏன்னா நானு மூர்ச்சை ஆயிட்டதால இது தான் நடந்துருக்கும்னு என்னால சொல்ல முடியல....

கொஞ்ச கொஞ்சமா விடிய ஆரம்பிச்சிச்சி தண்ணீலயே நான் மிதந்து இருக்குறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல நான் செத்துருவன்றது என் கண்ணுக்கு தெளிவா தெரிஞ்சிச்சி... அப்பிடி ஒரு நடுக்கம் என் சரீரத்துல ..

அப்போ திடீர்னு என்னோட சரீரத்த யாரோ தொடுற மாதிரி இருந்திச்சி .. நான் சின்னய்யா பத்தியே நெனைச்சதால அவுகளா இருக்குமோனு ஒரு சந்தோஷம்...

💞உயிராகி  நின்றாய் 💞💜Where stories live. Discover now