நித்தம் பல பெண்களை கடக்கிறேன்.
முகத்தின் வழி அவர் தெரிந்தாலும்,
அகத்தின் வழி உனையே பார்க்கிறேன்.செயல்களின் வழி அவர் தெரிந்தாலும்,
சாயலின் மூலம் உனையே காண்கிறேன்.அடி ராட்சசியோ, என் தாரகையோ!
தேவதைகளின் உருவமாய் உனை எண்ணுகிறேன்!!அடி இளங்கொடியே, என் புது முகிலே!
இவ்வுலகப் பேரழகின் சிம்மாசனமே!!கதிர் வீச்சு பல சோர்வுறாமல் கடந்தவன் நான்,
உன் சிறு விழி வீச்சில் நிலைத்தடுமாறி நிற்கிறேன்.வடிவமில்லா வார்த்தைகள் எனதென்ற போதும்,
ஒரு சிறு பார்வையில் அறிவாய் என் மொத்த காதலும்.சகியே!
ஆகாசம் நூறு நாம் தாண்டி போவோம்,
அன்பென்ற பெரும் உலகை படைத்து நாம் வாழ்வோம்!!-------------------------------------------------------
------- © கார்த்திக் ஸ்ரீநிவாசன் -------