கத்திப் பார்வையில் குத்தி கிழித்து ,
உதிராமல் சேமித்த உதிரத்தில் நுழைத்து ,
சிலையென சித்திரவதையில் சித்தரித்து ,
கருவிழியில் கருமைய்யென பதித்து ,
பகிரங்கமாய் பராக்கிரமமாய்
ஆற்பறித்து ,
கடலில் உவர்நீராய் என்னுள் கலந்திருந்தவள் , - இன்று
கண்ணீரில் உவர்நீராய் கலந்துவிட்டாள் !...