முட்கள் நிலைக்கும் செடி அது ...
இலைகளை கொத்து கொத்துதாக பிய்த்தெடுத்தேன் ...இலைகளில் இதமாய் தண்ணிர் தெளித்து அம்மிக்கல்லில் முன்னும் பின்னுமாய் அரைத்தேன் ...
அதன் வாசம் உயிர்மூச்சு வரை இதமாய் இறங்கியது ...
சிறு குச்சி உதவியுடன் சிறியதாய் தொடங்கி வெண்ணிற கைகள் மருதாணி வசமாய் மாற்றினேன் ...
கைகளில் மைன்மையான குளிர் பின்னங்கை அடிக்கடி கன்னங்களை நாடியது ...
இதோ சிவக்க துவங்கிவிட்டான் ...
ஏதோ புது வித உணர்வு புதிதாய் கண்கள் அடிக்கடி கைகளை சிறைகொண்டது...அதன் நருமணமோ உள்ளுக்குள் புது மாற்றங்களை ஏற்படுத்தியது ...
என்றும் இல்லாமல் புது வெட்கம் வந்து புகுந்து கொண்டது ...
தலையில் சூடிய மல்லிகைப்பூவும் உள்ளங்கையில் மின்னும் மருதாணியும் போட்டி போட்டு கொண்டன அதன் வாசனையை வீசி ...
என்னாளனுக்கு சிறு கோபம் அவளுடையவளை அவன் இல்லாமல் இந்த மருதாணி இத்தனை மாற்றம் நிகழ்த்துகிறதே என்று ..
........................................................................