புது உறவு

11 1 0
                                    

அவளவனின் மென்மையும் வன்மையும் முழுமையாய் அறிந்ததன் விளைவாய் உருவான உறவு !

மாதத்தில் மூன்று நாட்கள் தள்ளி நிறுத்தாமல் அவளை சேர்த்துக்கொண்ட உறவு !

கண் மூக்கு வாய் என்றிருக்கும் முகத்தில் பூரிப்பு எனும் முக்கிய உறுப்பை மகிழ்ச்சியின் வடிவத்தில் சேர்த்த உறவு !

தாய்மை என்னும் புனிதத்தை சிலிர்ப்புடன் விளங்க வைத்த உறவு !

சமூதாயம் எனும் வலையில்  கணவனானவனை ஆணாக கவுரவிக்கும் உறவு !

நா அறு சுவையை தேடும் ஆனால் வயிற்றில் ஒரு சுவையும் ஏற்காமல் அடம் பிடிக்க வைக்கும் உறவு !

வயிற்றுக்குள் குட்டி போர்களத்துடன் கூடிய ரணகளம் ஏற்படுத்தும் உறவு !

கணவனின் அக்கறையில் பிள்ளை சுமக்கும் பெண்ணவளை குழந்தையாய் மாற வைக்கும் உறவு !

மேடிட்ட வயிற்றுக்குள் தாயின் செயலை புரியாமல் புரிந்துக்கொள்ளும் உறவு !

மெலிந்த தேகம் எடை கொண்ட தேகமாய் மாறியபோதிலும் புது வரவின் ஆவலை அதிகபடுத்தும் உறவு !

நாட்கள் நகர நகர புது வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நிமிடங்களை அழகாக மாற்றும் உறவு !

சிறு காயத்தின் வலியையும் தாங்காமல் அன்னையிடம் தஞ்சம் அடைபவளை தன் பிள்ளைக்காக மரண வலியை பொறுத்துக்கொள்ள வைக்கும் உறவு !

தாயாய் அவள் ஸ்தானம் முழுமை படுத்திய உறவு !

பத்து மாதத்தின் விரதமாய்,  தவமிருந்து பெறும் வரம் புது உறவாய் அவர்கள் கையில் ....!

அழுகுரலில் இவ்வுலகிற்கு வருகை தந்த பிஞ்சு முகம், 
அன்னையின் பிரசவத்தின் வலிக்கு  இதமான மருந்தாய் அமைந்து, புது வரவில் புதிதாய்  பிறவி எடுத்தவளின் பயணமும் இனிதே துவங்கியது ...

❤❤❤

எண்ணங்கள் எழுத்தாக Where stories live. Discover now