பிறை நெற்றிக்கு மட்டும் சொந்தம் கொண்டாடும் அவனது கேசம் அவன் பாதியானவளின் கைகளுக்குள் திரண்டு விளையாட ஆசைகொள்வதை கண்காணித்தேன் ரகசியமாக...
உயிர் வாழ்வதற்கு மட்டும் உயிர்வளியை நாடாமல் தன்னவள் சுவாசித்த காற்றென்று எண்ணி தானும் ஆனந்தமாய் சுவாசிப்பதை கண்காணித்தேன் ரகசியமாக...
அடர்ந்து வளரும் தாடியை மட்டும் ஏற்க்கும் அவன் கன்னங்கள் இன்று தன் உரிமை கொண்டவளின் பட்டு போன்ற இதழ்களையும் சுவீகரித்ததை கண்காணித்தேன் ரகசியமாக...
தீக்கு சமமாய் சுட்டெரிக்கும் அவன் விழிகள் அவனவளை மட்டும் உவர்க்கும் பனித்துளிகளால் ஏரெடுப்பதை கண்காணித்தேன் ரகசியமாக...
ஒரு கணம் இதழ் விரித்தாலும் இதயத்தை கொள்ளை கொள்ளும் மாயவனின் சிரிக்கா உதடுகள் தன் மாயவளுக்காக சிரிப்பை உதிர்ப்பதை கண்காணித்தேன் ரகசியமாக...
பத்து யானைகளை ஒன்றாய் சமாளிக்கும் அவன் கைகள் அவனுடையாளை மட்டும் மெல்லிய பட்டாம்பூச்சி போல் சுமப்பதை கண்காணித்தேன் ரகசியமாய்...
ஆயிரம் எதிரிகளை துவம்சம் செய்யும் அவன் கால்கள் அவளின் சிறு வார்த்தைக்கு அசையாமல் நிற்பதை கண்காணித்தேன் ரகசியமாய்...
அவனின் கண் அசைவை கூட ரசனையுடன் கண்காணிக்கும் ரகசியமானவளின் ரகசியம் ...
........................................................................