ரட்சகியின் ராட்சசன் - 17

204 10 4
                                    

இதுவரை நான்கைந்து முறை அழைப்பு மணியை அழுத்தி விட்டாள். "சிவா... சிவா...." என பலமுறை சத்தமாக அழைத்தும் பார்த்து விட்டாள். அடுத்த வழியாக கதவை தட்ட போனவளின் கைப்பட்டு லேசாய் திறந்து வழிவிட்டது கதவு. ' என்ன கதவ கூட லோக் பண்ணாம இருக்கான் ' என எண்ணியபடி வீட்டிற்குள் சென்றவளின் கண்ணில் பட்டது அவ் வரவேற்பறையில் உடைந்து கிடந்த கண்ணாடி துண்டுகள் . அதைபார்த்து பெருமூச்சி விட்டவள் "சிவா.... சிவா...." என அழைக்க நிசப்தமே பதிலாய் கிடைத்தது.

'அவன் அங்கேதான் இருப்பான் ' என அவள் உள்ளுணர்வு சுட்டிக்காட்டிய அறையை நோக்கி சென்றவள் அவ்வறையின் கதவில் கை வைத்து தள்ள அது முழுமையாக திறந்திக் கொண்டது.

அவனின் கலைந்த சிகையை இன்னும் கலைத்து மகிழ்ந்தது காற்று. சிவந்த கண்கள், லேசாக வளர்ந்திருந்த தாடி, இரண்டு மேல் பட்டன்கள் போடாமல் விடப்பட்டிருந்த கசங்கிய சட்டை என ஆளே மாறிப்போயிருந்த தேவ் சாய்ந்திருந்த ஜன்னல் வழியே வந்த வெய்யோன் கதிர் அவன் முகத்தின் ஒருபக்கத்தில் விழ அவனின் கூர்பார்வையாயோ வெளியே வெறித்தப்படி இருந்தது.

தன்னேதிரே பார்வையால் ஆராய கூடிய அதிகபட்ச தூரத்தில் நின்றவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் " சிவா..." என அழைக்க, அக்குரல் செவியை அடையாதது போல் நின்றான் தேவ்.

மீண்டும் " சிவா..." என சற்று அழுத்தமாக அழைத்தவளின் குரலுக்கு எவ்வித பிரதிபலிப்பும் காட்டாமல் கற்சிலை போல் நின்றவனை பார்த்த சரித்ரா வாழ்வில் இதுவரை உணராத, வார்தைகளால் விவரிக்க முடியாத வலியை மனதில் உணர்ந்தாள்.

நிமிடங்கள் நொடிகளாய் கரைந்து போக... அவ்வறையினுள் அவள் காலை எடுத்து வைக்க போன நொடி "வெளிய போ...." என தெளிவாகவும், நிதானமாக சிங்கத்தின் கர்ஜனை போல் வெளிவந்த அவன் குரலில் முன்வைக்க போன அவளின் கால்கள் தன்னையறியாமலே பின்வாங்க தன்னவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவளால் அழமுடியவில்லை ஆனால் உயிர்வரை வலித்தது தன்னவனின் ஒதுக்கம்.

ரட்சகியின் ராட்சசன் Où les histoires vivent. Découvrez maintenant