"நா பைத்தியம் இல்ல ஆதித் " என உஷ்ணமாக வெளிவந்த சரித்ராவின் வார்த்தைகளில் மதி, நந்து, ஆராதனா மூவரும் அதிர்ந்து பார்க்க, ஆதித்தோ கேட்ட வார்த்தைகளை நம்பமுடியாமல் சரித்ராவை பார்த்தான்.
"என் கூட பழகிறது உங்களுக்கு அவமானம்னா என்ன விட்டு விலகி இருங்க. எனக்கு யாரும் தேவையில்ல !!" என யாரும் என்ற வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி ஆதித்தை பார்த்து சொன்னவளை வலி நிறைந்த பார்வையுடன் ஏறிட்டவன் வேக நடையுடன் அங்கிருந்து அகன்று செல்ல, அவன் பார்த்த பார்வையிலே உடைந்தவள் தன்னிச்சையாக அவன் பின்னால் போகச் சென்ற கால்களை அடக்கி தன் அருகில் நின்றவர்களையும் பொருட்படுத்தாமல் வகுப்பை நோக்கி நடந்தவளின் மனம் 'அவங்கள விட்டு விலகியே இருக்கனும். அதுதான் அவங்களுக்கு நல்லது.' என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உருபோட்டு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டது.
இதோ இரண்டு மணிநேரம் கடந்துவிட்டது. இன்னும் ஆதித் வகுப்பிற்கு வரவில்லை. அவன் நிச்சயம் அவர்கள் வழமையாக அமரும் மரத்தடியில் தான் இவள் வருவாள் என காத்திருப்பான். " என்ன விட்டு விலகியே இரு பட்டு !! இல்லாட்டி என்னோட துரதிர்ஷ்டம் உன்னையும் விடாது." என வகுப்பின் வாயிலை பார்த்தபடி ஆதித்துடன் மானசீகமான உரையாடி கொண்டிருந்தவளின் பார்வையில் அவன் வருகை பதியவும் உடனே குனிந்து புத்தகத்தில் பார்வையை பதித்தவள் சில நிமிடங்களின் பின் உணர்ந்த அவனின் பார்வை வீச்சில் மனம் குற்றவுணர்வில் நொறுங்கி போக தன் நிராகரிப்பே தனக்கு கொடுத்த பெரும் வலியை நெஞ்சமெல்லாம் சுமந்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க துடித்த விழிகளை கட்டுபடுத்த வழியறியாது இறுக்க மூடிக்கொண்ட சரித்ராவிற்கு அவன் பார்வை வீச்சி அகன்ற பின்னும் தன்னை சமப்படுத்திக்கொள்ள நீண்ட நேரம் தேவை பட்டது.
அன்றைய கல்லூரி நாளை அமைதியாக முடித்துக்கொண்டு தனியாக விடுதியை அடைந்தவளிடம் அக்ஷரா பேசிய மறுநொடி "நா நேத்து கனவு கண்டு கத்தினத ஆதித் கிட்ட சொல்லிருக்க ! அவன் என்னவோ நான் பைத்தியக்காரி மாதிரி என்ன சைக்காட்டிஸ் கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லுறான் !! இனி என் விஷயத்தில தலையிடிற வேல வச்சிக்காத அக்ஷரா !! உன் லிமிட்டோட இருந்துக்கோ " என கோபத்தில் கத்தி அக்ஷராவின் கண்ணீரை காண முடியாமல் தலையோடு போர்த்திக்கொண்டு உறங்குவது போல் நடித்தவளின் மனம் மௌனமாக கண்ணீர் சிந்தியது.
ESTÁS LEYENDO
ரட்சகியின் ராட்சசன்
Misterio / Suspensoஅவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திர...