ரட்சகியின் ராட்சசன் - 13

198 9 11
                                    

வெய்யோன் தன் தளிர் கரங்களால் பூமியை அணைக்க ஆரம்பிக்க, விடியலிலே வெறுமையை உணர்ந்தாள் சரித்ரா. கட்டிலில் படுத்திருந்த படியே தலையை திருப்பி ஏதிரில் வெறுமையாய் இருந்த கட்டிலை ஏறிட்டவள்
"அக்ஷராவும் வீட்டுக்கு போய்ட்டா ! இந்த இரண்டு கிழமையும் எப்ப முடியும் ? ஏன்தா இந்த லீவ் வருதோ? " என வாய்விட்டு புலம்பியபடி தலையணையினுள் முகத்தை புதைத்துக் கொண்டால்.

கடிகாரம் 5.50 என காட்டிச் சிரிக்க அதை பார்த்தவள் தலையோடு போர்த்திக்கொண்டு உறங்க முற்பட்டால். ஆனால்! பதினான்கு வருட விடுதி வாழ்க்கையில்; அதிகாலையிலே விழிக்கும் பழக்கம் அவளை உறங்க விடாமல் தொந்தரவு செய்ய, தன் விதியை எண்ணி நொந்தபடி ஒரு பெருமூச்சுடன் எழுந்து குளிக்க சென்றால் சரித்ரா .

☆☆____________________________________☆☆

ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி முடியை உலற வைத்துக் கொண்டுடிருந்தவளின் பார்வை ஒரிடத்தில் நிலைத்து முகம் முழுவதும் மகிழ்ச்சியில் புதுமலராய் மலர்ந்தது.

பார்வை பதிந்த இடத்தை நோக்கி முயல் குட்டியாய் ஓடியவளின் ஓடிய வேகத்தை செப்பும்படி வேக மூச்சுகளுடன் அந்த கருப்பு நிற பைக்யின் மீது சாய்ந்து நின்று ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த தேவ்வின் முன் நின்றால் சரித்ரா.

"எங்கையும் போகலயா?" என ஃபோனில் இருந்த பார்வையை விலக்கி அவளை பார்த்து தேவ் கேட்க அதற்கு மறுப்பாக தலையசைத்தவளை பார்த்து அவளுக்கான வசீகர சிரிப்பை சிந்தியவன் " ஓகே ரதி. இரண்டு கிழமைக்கு உனக்கு தேவையான dressஸ பேக் பண்ணிக்கிட்டு வா ! நா wait பண்றேன் " என்றவனின் முகத்தை ஒரு நொடி பார்த்தவள் "ஐஞ்சி நிமிஷத்தில வாரேன்." என குழந்தையின் குதூகலிப்புடன் திரும்பி ஓடினாள் சரித்ரா .

அவள் செல்வதை பார்த்தவாறே ஆதித்திற்கு call செய்தான் தேவ்.
"hello...." என்றவனின் குரலில் தூக்கம் கொட்ட,

" டேய் jp! நா ரதிய என் கூட கூட்டிக்கிட்டு போறே."

தேவ்வின் jp யில் காலையிலே கடுப்பான ஆதித் " பேபி கவனம்! அவ மேல ஒரு துரும்பு பட்டாலும் உன்ன எரும்பு மாதிரி நசி....."

ரட்சகியின் ராட்சசன் Donde viven las historias. Descúbrelo ahora