மூடி இருந்த இமை சிப்பாய்களை ஊடுறுவி அவளின் விழித்திரையை அடைந்தான் செங்கதிரோன் தன் கதிர் கரங்களை கொண்டு. அவனின் ஒளியில் உறக்கம் கலைந்தவள் நெற்றியின் உணர்ந்த ஈரலிப்பில் கண் திறந்த சரித்ராவின் முன் அவனின் வசீகர சிரிப்புடன் நின்றிருந்தான் தேவ்.
" good morning ரதி" என அதே புன்னகையுடன் சொல்ல தலையை சரித்து மலர்ந்த சிரிப்புடன் "good morning சிவா. அப்பா கூட இப்பிடித்தான் நெத்தில முத்தம் கொடுத்து எழுப்புவாரு. " என்றவளின் பார்வை அறையினை அலச ஜன்னலின் திரைச்சீலைகள் விலக்கப்பட்டு அதன் வழயே எட்டிப்பார்த்தான் சூரியன்.
அவள் பார்வை சென்ற திசையை பார்த்தவன்
" 8.00 மணி தாண்டியாச்சி !!! நா காலைல இருந்து பார்த்தேன்! நீ எழும்பி வரல. உனக்கு உடம்பு சரில்லயோனு பார்க்க ரூம்க்கு வந்தேன் . நீ அசந்து தூங்கிட்டு இருந்த. அதா நா எழுப்பல. ஆனா !! உன் பட்டு ஆறு மணில இருந்து இப்ப வரைக்கும் அறுபது கோல் பண்ணிட்டான். என்கூட ஒரு குட்டி குரூட்சேத்திரமே பண்ணிட்டான்." என்றவன் ,சலிப்பாக இருப்பக்கமும் தலையாட்டியப்படி, "முதல்ல அவனுக்கு ஃபோன் பண்ணி பேசிடா! வெளில வேலைக்கு ஆட்கள் வந்திட்டாங்கடா நா போறேன்." என்னவன் வெளியேற; சைலன்ஸ்யில் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க எழுபத்திரெண்டு முறை கோல் செய்திருந்தான் ஆதித். அதை பார்த்து சிரித்தவள் மறுகணம் அவனிற்கு ஃபோன் செய்து அவனுடன் கதைத்து முடித்தவள் குளிக்கச்சென்றாள் .
அந்த முழுநாளையும் வேலை முழுங்கிக்கொள்ள தொடர்ந்து வந்த நாட்களும் அதேப்போல் நகர்ந்தது. ஐந்து நாட்களில் வீட்டு வேலை முடிந்து விட வீட்டை பெயிண்ட் செய்ய ஆரம்பித்தனர். தேக்கு சோபாக்களை திருத்த கொடுத்திருந்தனர். பெய்ன்டின் நிறம் தொடக்கம் அனைத்திற்கும் அவன் அவளின் விருப்பம் கேட்க அவனவளோ 'உன் இஷ்டம் ' என அனைத்து பொறுப்பையும் அவன் தலையில் கட்டிவிட்டாள்.
ஒவ்வொரு நாளும் சீனிவாசன் தவறாமல் விஜயம் செய்துவிடுவார். வேலைக்கு வருபவர்களுடன் இணைந்து வேலை செய்வார்கள் சரித்ராவும், தேவ்வும். இவன் வீட்டினுள் வேலை செய்தால் அவளோ தோட்டத்தில் வேலை என்ற பெயரில் அராஜகம் செய்து கொண்டிருப்பாள் . வேலை செய்பவர்களையும் வேலை செய்ய விடாமல் இழுத்துபிடித்து கதையளப்பாள். பாம்பை கண்டால் பலரும் பயந்து ஓட பாம்பை விரட்டுகிறேன் என்ற பெயரில் இவள் செய்யும் கூத்தில் 'அவளுக்கு ஏதும் ஆகிறுமோ?' என பயந்து பிபி எகிற நிற்பது தேவ்தான்.
KAMU SEDANG MEMBACA
ரட்சகியின் ராட்சசன்
Misteri / Thrillerஅவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திர...