ரட்சகியின் ராட்சசன் - 01

1.1K 17 74
                                    

வானை முட்டும் மலைகளுக்கு நிகராய் வளர்ந்திருந்த மரங்கள் அடர்ந்த அந்த ஆரணியம் அமானுஸ்ய நிசப்தத்தை தன்னுள் ஏற்றிருந்தது. அவ் வனத்தின் நிகழப்போகும் கொடூரம் அறிந்து; நிலவும் முழுமையாக இருளில் மறைந்து ஆரண்யமே இருள் அரக்கனின் ஆட்சியில் அடிமையாய் இருந்தது.

நடுநிசியில் அவ் ஆரண்யத்தின் நிசப்தத்தை தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட இடத்தில் இருந்து வந்த மரண ஒலங்கள் குழைத்தது. குருதி தோய்ந்த மண்ணில் பல ஆண்களின் தலைகளும் ,உடல்களும் தனிதனியே சிதறிக்கிடக்க ஓங்கிய வாளில் தீப்பந்தங்களின் ஒளிப்பட்டு முகத்தில் குருதி வழிய சிகப்பு நிற கண்களை உடைய ஒரு கோர முகமும், மரண ஒலமும் சேர்ந்து தோன்றிய கணம்.........

" ஈஸ்வரா !!" என அலறியபடி  விழித்தால் சரித்ரா . அவள் உடல் வியர்வையில் குளித்திருக்க மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்கி தன்னை சமப்படுத்தியவள் ;அருகில் இருந்த நீரையருந்தினால். கைபேசியில் மணியை பார்க்க அது இரண்டு என காட்டியது. ஒரு பெருமூச்சை விட்டப்படி மின்குமிழை ஒளிரச்செய்துவிட்டு  ஒரு நாட்குறிப்பில் தனக்கு வந்த அந்த கனவை எழுத தொடங்கியவளின் சிந்தனை அக் கனவிலே நிலைத்தது நின்றது.

" சில வருஷமா இந்த கனவுகள் ஏன் எனக்கு வருது? அதில என்ன நடக்குது? எப்பவும் என் கனவில வார அந்த கண்கள் அது யாரோடது?அந்த கண்கள் எனக்கு நெருக்கமாக உணர்வ தருதே. ஆண்டவா !! " என எப்போதும் போல் தோன்றும் அவள் விடையறியா கேள்விகளை வாய்விட்டே கேட்டால் சரித்ரா.

இக் கேள்விகளுக்கு அவளிடம் விடையும் இல்லை,  அறிய வழியும் இல்லை. ஆனால் ஓரு நாள் விடை அறியும் போது அவள் நிலை?

      ☆☆__________________________________☆☆

செங்கதிரோன் தன் கரங்களால் வையகத்தை அணைக்க , அன் நகரவாசிகள் தங்கள் வாழ்க்கை ஒட்டத்தை தொடங்கினர். சரித்ரா தனது தோள்பையை மாட்டியப்படி தனது தொடர்மாடி குடியிருப்பு வீட்டின் கதவை பூட்டிவிட்டு படிகட்டு வழியே கார் பார்க்கிங்கை நோக்கி சென்றாள்.

ரட்சகியின் ராட்சசன் Donde viven las historias. Descúbrelo ahora