ரட்சகியின் ராட்சசன் - 10

209 11 14
                                    

காலில் சக்கரம்கட்டியதுப்போல் வேலை செய்துக் கொண்டிருந்தால் சரித்ரா. கிட்டத்தட்ட ஒருவாரம் செய்யாத பங்களிப்பை இந்த பன்னிரண்டு் மணித்தியாளத்தில் செய்து முடிக்க முயற்சி செய்திக் கொண்டிருந்தால்.
இந்த கலவரத்தில்; அவள் புடவை வேறு "இப்போது புதையல் எடுக்கப்போகிறாய் !' என அவள் நடக்கும் போதெல்லாம் தடுக்கிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

" ஹப்பா !!! " எல்லாம் நல்லபடியாக  ஆரம்பித்து விட்டது. இப்போது கல்லூரி முதல்வரின் உரை நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது.

ஸ்டேஜ்க்கு பின்புற வாயிலில் இருந்த யாருமற்ற, இரண்டு வாயில்களை கொண்ட  அறையில் இரு கையையும் தலைக்கு முட்டுகொடுத்தப்படி அமர்ந்திருந்த சரித்ராவின் முன் ;இரு கைகளையும் பின்னுக்கு கட்டியப்படி கன்னக்குழி குழந்தை சிரிப்புடன் வத்து நின்றான் ஆதித் .

அவனை கண்டதும் இருக்கையை விட்டு எழுந்தவள்  நெட்டிமுறித்து திருஷ்டி கழித்தால்.  "அழகா இருக்க பட்டு என் கண்ணே பட்டிருச்சி!!"  என அவன் கன்னம் கிள்ளி கொஞ்சினால்.

" போ!! பேபி! " என சிரித்தவன் "நீயும் தான் பேபி அழகா இருக்க.அதிலயும் இந்த  dark pupil saree உனக்கு  செம்மயா இருக்கு."

"பட்டு உன் கைல என்ன இருக்கு? " என அப்போதுதான் அவன் கையை பார்த்தவள் கேட்டால். "  முதல்ல உன் கண்ண மூடு பேபி" என சிரித்தப்படி கட்டளையிட்டான் ஆதித் .
" பிளீஸ் " என தலையை சாய்த்து கேட்டவளின் மீது கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் ; உதட்டை பிதுக்கியப்படி மறுப்பாய் தலையசைத்தான் ஆதித். அதற்கு உதட்டை சுளித்தப்படி கண்களை மூடினால் சரித்ரா.

" பேபி! இப்ப கண்ணதிற" என்ற பட்டுவின் குரலில் இமைபிரித்தவளின்  விழிகள் விரிந்து, அவள் முகம் மகிழ்ச்சியில் ஒப்பனை இல்லாமலே ஜொலிக்க ஆரம்பித்தது. அவள் முன் கருப்பு நிற பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தது கருநீல நிற strap sandals.

சென்ற வாரம் ஆதித்தை இழுத்துக்கொண்டு சென்ற ஷாப்பிங்கின்  போது அவளை கவர்ந்த செருப்புதான் இது . ஆனால் அவள் துரதிர்ஷ்டம் அவள் காலுக்கு பொருந்தும் அளவில் மட்டும் கிடைக்கவில்லை. அந்த கடையில் மட்டுமல்ல,  அந்த நகரத்தில் இருந்த அத்தனை கடையிலும் அலசிவிட்டால். ம்ஹூம்! ....கிடைக்கவே இல்லை!! கடைசியில் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு விடுதியை அடைந்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது.

ரட்சகியின் ராட்சசன் Donde viven las historias. Descúbrelo ahora