மறுநாள் காலை எப்பொழுதும் போல் மிகவும் ரம்யமாக விடிந்தது காலையிலேயே எழுந்து தங்களுடைய வழக்கமான வேலைகளை செய்த நாயகிகள் சரியாக எட்டு முப்பது மணி அளவில் நீட்டான ஒரு உடையில் தங்களுடைய நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அலுவலகம் செல்ல கிளம்பினார்கள் நாயகிகளை பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது ஏனென்றால் என்னதான் குறும்புத்தனத்தை வல்லவர்களாக இருந்தாலும் தாங்கள் இருக்கும் பதவிக்கு ஏற்ப அவர்கள் அணிந்திருந்த ஆடையும் இருந்த நேர் நடையும் பார்த்து மகிழ்ந்து கொண்டு அவர்களுடன் கிளம்பி சென்றார்கள்.
அவர்கள் அனைவரும் சென்று அவர்களுடைய தலைமை அலுவலகத்திற்கு எப்பொழுது அதிதி மற்றும் அனன்யா நண்பர்களாக ஒன்று சேர்ந்தார்களா அப்பொழுது அவர்களுடைய பெற்றோரும் அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒன்று சேர்ந்து விட்டனர் அதனால்தான் கம்பெனியையும் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்து ஒரு தலைமை அலுவலகத்தை உருவாக்கிவிட்டனர். அதனால் அவர்களுக்கு தனித்தனியாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
அங்கே அலுவலகத்தில் 9 மணிக்கே மிகவும் பரபரப்பாக இருந்தது ஏனென்றால் இதனால் வரை தங்கள் முதலாளிகளுக்கு புதல்விகள் உள்ளனர் என்பது யாவரும் அறிந்த விஷயமே ஆனால் இதுநாள்வரை அவர்களை யாரும் நேரில் பார்த்ததில்லை அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஹரி என்பதைத்தவிர ஏனென்றால் அவர் அதிதி பிறந்தது முதல் பார்த்தவர் அன்புவின் நெருங்கிய நண்பர் அதனால் அண்ணன்யாவையும் தெரிந்திருந்தது.
அங்கு அனைவரும் தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர் அங்கே ஒரு கூட்டம் அதிதி மற்றும் அனன்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தது அதில் இருந்தவர்கள் நந்தினி ஜானகி மற்றும் பிருந்தா.
ஜானகி "உண்மையாவே அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ அழகா இருப்பாங்க இங்க இருக்கிற எல்லாருமே அவங்க அழகா இருப்பாங்கன்னு பேசிக்கிறாங்க அதுமட்டுமில்லாமல் இவ்வளவு நாள் நம்ம மட்டும் தான் அழகு அப்படின்னு பெருமையா இருந்தபோது ஆமா சொல்லிக்கிட்டு திரிஞ்சவங்க எல்லாம் இப்ப நம்ம காதுபடவே நம்மள விட அவங்க அழகா இருப்பாங்கன்னு பேசிக்கிறாங்க" என்று பொறாமையில் மற்ற இருவரையும் பார்த்து கேட்டாள்.
YOU ARE READING
நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
Romanceஇது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில்...