ஒரு மாதம் மிகவும் மகிழ்ச்சியாக சென்றது அதற்கு முக்கிய காரணம் தீரன் ஆபீஸ் பக்கம் அவ்வளவாக வரவில்லை முதல் நாள் அந்த கலங்கிய கண்களுக்கு சொந்தக்காரி பார்த்தவன் வேறு எதிலும் கவனம் செலுத்த இயலாமல் தனக்கு ஒரு இடைவெளி தேவை என்று இந்த ஒரு மாத இடைவெளியில் தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
அதேசமயம் வந்த முதல் நாளே நந்தினி மற்றும் ஜானகியை பற்றி தெரிந்து வைத்திருந்தான் அதன் மூலமாக அவர்களையும் தங்களுடைய கூட்டத்தில் இணைத்துக் கொண்டான். நந்தினிக்கு ஆகாஷ் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே இருந்தது தற்போது கூடுதலாக அதிதி மற்றும் அனன்யாயும் பழிவாங்க வேண்டும் என்பதால் எந்த வித காரணமும் சொல்லாமல் இணைந்து கொண்டால் ஆனால் ஜானகி யோசித்துக் கொண்டிருந்தாள் அவள் யோசிப்பதை பார்த்து நந்தினி அவளிடம் "ரொம்ப யோசிக்காதே பெருசா ஒன்னும் பண்ண மாட்டாங்க நமக்கு தேவை அவங்க அவமானப்பட வேண்டும் அவ்ளோதான் அதனால சேர்ந்து கோ" என்று கூறினாள்.
அதன்பிறகு ஜானகியும் அரைமனதாக ஒத்துக் கொண்டாள். அன்று அனைவரும் இவர்களுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்ட ஒன்றுகூடினர். புதிதாக வந்த இருவரையும் பார்த்த ராஜேஷ் மாலினி மற்றும் ராதிகா குழப்பமாக தீரனை பார்த்தனர்.
தீரன் இனிம இவங்களும் நம்மளுடைய கூட்டத்தில் ஒருத்தங்க என்று நந்தினியைப் பற்றி முழு விவரத்தையும் கூறினான். (பின்குறிப்பு எதை கூறினாள் ராதிகா மாலினி கோபம் கொள்ள மாட்டார்களோ அதை மட்டுமே கூறினான்.) பின்பு தங்களுக்கான திட்டத்தை வகுப்பு ஆரம்பித்தனர்.
ராதிகா "முதல்ல ஒண்ணா இருக்கிற அவங்க எல்லாரையும் பிரிக்கணும் அப்படி செஞ்சா மட்டும்தான் நாம செய்யறது சக்சஸ் ஆகும் ஏன்னா நம்மை ஏதாவது ஒரு விஷயம் செய்யுறதுள்ள அவங்க ஒற்றுமையை நாளே எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. முதல்ல அவங்க பிரெண்ட்ஸ் எல்லாரையும் தனித்தனியா பிரிக்கணும்" என்று கூறினாள்.
BINABASA MO ANG
நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
Romanceஇது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில்...