அத்தியாயம் 18

516 21 23
                                    

தங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த விஷ்வா மற்றும் கார்த்தி இருவரையும் கொலைவெறியில் முறைக்க ஆரம்பித்தனர் அதிதி மற்றும் அனன்யா. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களால் முடிந்த வரையில் சிரித்து ஓய்ந்து அமர்ந்தனர். ஏற்கனவே அவர்கள் இருவரும் எதற்காக திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டார்கள் என்று அதிதி அனன்யா இருவரும் கேட்ட கேள்வியில் அரண்டு போயிருந்த மற்றவர்கள் இவர்கள் சிரிப்பதை பார்த்து இன்னும் கடுப்பாகி பொறுமை இழந்த நிலா "ஏன்டா ஏற்கனவே இந்த இரண்டு லூசு களும் எதுக்கு கோவத்துல இருக்குதுங்கன்னு தெரியல இதுல நீ ரெண்டு பேரும் வேற பைத்தியம் மாதிரி சிரிச்சுகிட்டு இருக்க சொல்லிட்டு சிரி" என்று கூறினாள்.

சிரித்து முடித்த விஷ்வா "இல்ல நிலா இதுங்க ரெண்டும் என்ன எதிர்பார்த்து அங்க போனங்கன்னா எப்பவும் பண்ற மாதிரி அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்துவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டுதான் சென்றார்கள். ஆனால் இவர்களை தன்போக்கில் விட்டால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ என்று யோசித்தே வேறு வேலை எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்த அண்ணா இருவரும் இவர்களை திருமணம் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்கள். இதுல மெயின் விஷயம் என்னன்னா அவங்க ரெண்டு பேரும் இவங்க ரெண்டு பேரு கிட்டயும் லவ் பண்றதா சொல்லவே இல்ல டைரக்டா கல்யாணம் பத்தி பேசினாங்க எனக்கு தெரிஞ்சி அதுவும் சீக்கிரம் இருக்கும் சோ இவங்க போட்ட பிளான் எல்லாம் ஃபெயிலியர் ஆயிடுச்சு அதான் நம்ம மேடம் ரெண்டு பேரும் கோபமா இருக்காங்க அப்படித்தானே " என்று அனைவருக்கும் பதில் கூறியதுடன் அதிதி மற்றும் அனன்யா இருவரையும் பார்த்து கேள்வி  கேட்டான்.

வினோதினி இருவரையும் பார்த்து "விஸ்வா சொல்றது எல்லாம் உண்மையா" என்று கேட்டாள்.

அனன்யா "நீ வேற ஏன்டா வெறுப்பேத்துற உண்மையாவே நாங்க எவ்வளவு பிளான் போட்டு இருந்தோம்னு உனக்கு தெரியுமா இப்போ ஒரு மாசத்துல கல்யாணம்னு சொல்லி இவனுங்க எங்ககிட்ட சொல்றானுங்க கண்டிப்பா எங்க மேல காதல் இல்லாம அவங்க கல்யாணம் பண்றவங்க கிடையாது அது எங்களுக்கு உறுதியா தெரியும் ஆனா இப்போ இந்த கல்யாணம் நடந்தா எங்களால எதுவுமே பண்ண முடியாது கம்ப்ளீட்டா நாங்க அவங்க கண்ட்ரோல்ல தான் இருப்போம் அதையெல்லாம் நினைக்கும்போதே கடுப்பா இருக்கு இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா வீட்ல எல்லார்கிட்டயும் பேசி சம்மதம் வாங்கிட்டாங்க அது வேற கடுப்பாகுது" என்று கூறினாள்.

நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )Where stories live. Discover now