அத்தியாயம் 14

521 22 4
                                    

விஸ்வா மற்றும் கார்த்தி இருவரையும் பார்த்த அனன்யா அவர்கள் இருவரும் தாமதமாக வந்ததற்கு கிண்டல் செய்தாள். அதை உணர்ந்த இருவரும் அனன்யா நிலா மற்றும் வைஷ்ணவியை முறைக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் இருவரும் தன்னை முறைப்பதை பார்த்த வைஷ்ணவி அவசரமாக "என்ன எல்லாம் முறைக்காத நான் தானே உங்களுக்கு நாங்க இருக்கக்கூடிய இடத்தை இந்தா இந்த லூசு போனை அவளுக்கே தெரியாமல் எடுத்து லொகேஷன் அனுப்பினேன்" என்று நந்தினி இருக்கும் இடத்தை கைகாட்டி கூறினாள். அவள் கூறியதைக் கேட்ட நந்தினி அடிப்பாவி மொத்தமா எல்லாம் வில்லத்தனம் பிடிச்ச கூட்டமா தான் இருக்கு என்று உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாள்.

விஷ்வா வைஷ்ணவியை பார்த்து உன்னை அப்புறமா பாத்துக்குறேன் அதே மாதிரி இன்னைக்கு உள்ள டெஸ்ட கேன்சல் ஆயிடுச்சு அப்படின்னு சந்தோஷப் படாத உங்க ப்ரொஃபஸர் கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு நாளைக்கு உனக்கு அந்த டெஸ்ட் இருக்கு" என்று கூறிவிட்டு அனன்யா மற்றும் நிலா புறம் திரும்பினான்.

அதைக்கேட்ட வைஷ்ணவி மனதிற்குள் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா அண்ணா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று நினைத்தவள். அவன் நிலாவை முறைத்து பார்ப்பதை பார்த்து "டேய் அண்ணா எனக்கு ஒரு டவுட்டு" என்று கேட்டாள். அவள் கேட்ட பாவனையே ஏதோ வில்லங்கமாக கேட்கப் போகிறாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர் இருந்தாலும் விஷ்வா "என்ன கேளு" என்று கடுப்புடன் கூறினான்.

வைஷ்ணவி "இல்லடா அண்ணா நிலா அக்காக்கு தான் இப்போ தீரன் மாமா கூட கல்யாணம் ஆகிடுச்சு அதுக்கு எதுக்கு அக்காவும் பெருசா எதுவும் ரியாக்சன் கொடுக்கல ஆனா நீ எதுக்கு இப்படி கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு இருக்க ஒருவேளை உனக்கு நிலா அக்கா மேல இன்ட்ரஸ்ட் இருந்துச்சு போலையே" என்று ஏற்ற இறக்கமாக கூறினாள்.

அவள் கூறியதை கேட்டு அவ்வளவு நேரம் நிலாவுக்கு தீரன் மேல் கோபம் கூட மறந்து சிரிப்பு வந்தது அனன்யா விஷ்வாவை பார்த்து "உனக்கு இது தேவையா ஒழுங்கா அவளை கிண்டல் பண்ணாம இருந்தா இப்படி எல்லாம் கேக்க போறாளா" என்று கேட்டாள்.

நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )Dove le storie prendono vita. Scoprilo ora