Epilogue

715 28 6
                                    

சில வருடங்களுக்கு பிறகு

அந்த கல்யாண மண்டபம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அதற்கு காரணம் அந்த மண்டபத்தில் 3 திருமணங்கள் நடைபெறுவதற்கான வேலைகள் மிகவும் மும்முரமாக சென்று கொண்டிருந்தது.

மண்டபத்தில் மூன்று மணவரைகள் அமைக்கப்பட்டு அதில் ஐயர் அமர்ந்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார் 3 ஐயர் அருகிலும் அந்த வீட்டின் வாண்டுகள் அமர்ந்து அவர் கூறுவதற்கு விளக்கம் கேட்டு அவரை தொல்லை செய்து கொண்டிருந்தனர்.

முதலாவது இருந்த ஐயர் அருகிலிருந்த அந்த வாண்டு பையன் அபினேஷ் அதிதி மற்றும் ஆகாஷின் அருந்தவப் புதல்வன் அவன் அந்த ஐயரைப் பார்த்து "குடுமி அங்கிள் நீங்க எதுக்கு புரியாத மாதிரி பேசுறீங்க உங்களுக்கு உங்க வீட்ல ஒழுங்கா ஏபிசிடி சொல்லி தரவில்லையா நான் வேண்டுமென்றால் உங்களுக்கு சொல்லித் தரவா" என்று கேட்டான்.

அதற்கு அவர் சின்னப் பையனிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் "நீ போய் ஒழுங்கா பால் சாப்பிடு நான் சொல்றது எல்லாம் உனக்கு புரியாது" என்று கூறினார்.

அபினேஷ் "அதெல்லாம் எனக்கு புரியும் நீங்க சொல்லுங்க நான் இன்னும் ஒரு வருஷத்துல ஸ்கூலுக்கு போக போறேன் அதனால நீங்க சொல்லுங்க எனக்கு எல்லாம் தெரியும்" என்று கூறினான்.

ஐயர் மனதில் இந்த காலத்து சின்ன பிள்ளைங்க ரொம்ப வெவரமா இருக்கு இதுல கிட்ட பேசி ஜெயிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டு பேசாமல் இங்கிருந்து ஓடி விடுவோமா இல்லை கல்யாணத்தை முடித்து கொடுத்து விட்டு போவோமா என்ற யோசனையில் அமர்ந்து இருந்தார்.

இரண்டாவது ஐயர்  அருகில் அமர்ந்து இருந்த மற்றொரு குட்டி வாண்டு அவினாஷ் அதிதி மற்றும் அர்ஜுன் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் அவரைப் பார்த்து "தலையிலே குடுமி வைத்திருக்கிற அங்கிள் நீங்க எதுக்காக இந்த நெருப்புல கொஞ்சம் கொஞ்சமா ஏதோ போடுறீங்க தீயை அணைக்க வேண்டும் என்றால் தண்ணி அல்லது மண்ணுதான் போடணும்னு சொல்லி கொடுத்து இருக்காங்க நான் வேணும்னா வெளியே போய் அது இரண்டையும் எடுத்துட்டு வரவா" என்று கேட்டான்.

You've reached the end of published parts.

⏰ Last updated: May 18, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )Where stories live. Discover now