விலகாதே என்னுயுரே 4
பாரதி தான் பணிபுரியும் மருத்துவமனையின் சார்பாக திருச்சி கும்பகோணம் ஆகிய இரு இடத்திலும் ஒரு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து இருப்பதால் பாரதியும் ரியாவும் திருச்சி வந்து உள்ளனர். காலை தொடங்கி மாலை வரை மருத்துவமுகாமில் இருந்தவர்கள் இப்போது தான் அவர்களுக்காக மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்து இருந்த அறைக்கு வந்தனர். இரவு உணவு அவர்களுக்காக தயாராக இருக்க பாரதி சென்று குளித்து விட்டு சாப்டுவதற்கு முன்பு சந்தோஷிற்கு அழைத்தாள்.
சந்தோஷ் அழைப்பை ஏற்றதும் ஹலோ என்ன பண்றீங்கப்பா சாப்பிட்டாச்சா என்ற பாரதிக்கு எதிர்ப்புறம் இருந்த சந்தோஷோ ம் என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.
என்னாச்சுப்பா உடம்புக்கு சரியில்லையா ஏன் பேசமா இருக்கீங்க என்று பாரதி சற்று பதட்டத்துடன் கேட்க.
ஐ பேட்லி மிஸ் யூ திவி என்ற சந்தோஷின் குரலில் கூட பாரதியை இரண்டு நாளாக காணத ஏக்கம் தெரிந்தது. தினமும் ஒருமுறையாவது பாரதியை மருத்துவமனையிலோ இல்லை அவள் வீட்டிலோ சென்று பார்த்து விடுவான். இந்த ஒன்றைரை ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவளை பார்க்காமல் சந்தோஷ் இருந்தது கிடையாது. இது தான் அவர்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட முதல் பிரிவு. அதை இருவராலும் தாங்கி கொள்ள முடியவில்லை.
பாரதி, நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா.. நாளைக்கு ஒரு நாள் தான் நாளை மறுநாள் உங்க முன்னாடி வந்து நிற்பேன் ஓகேவா. இப்ப நல்ல ஹாப்பியா பேசுங்க. இப்படி நீங்க டல்லா பேசுறது எனக்கு பிடிக்கலை.
இன்னும் 36 மணி நேரம் கழிச்சு தான் உன்னை பார்க்க முடியுமா? நீ இல்லாமா ஒரு ஒரு நிமிஷத்தையும் நகர்த்துறது ரொம்ப கஷ்டமா இருக்கு திவி என்று தேய்ந்த குரலில் மறுபடியும் கூறினான்.
அதை கேட்ட பாரதிக்கும் கஷ்டமாக இருந்தது. ஏதோதோ பேசி அவனை சமாதானம் செய்த பாரதி சரிப்பா நல்லா தூங்குங்க குட் நைட் என்று கூறி வைக்க போனவளிடம் ஒரு நிமிஷம் இரு திவி என்றான்.
