விலகாதே என்னுயுரே 💔💔 5

60 7 1
                                    

விலகாதே என்னுயுரே 5

ஏய் செல்வி பூஜைக்கு தேவையான  எல்லா பொருளையும் மறக்கமா எடுத்து வச்சிட்ட தானே, அப்புறம் கோவிலுக்கு போய் அது இல்ல இது இல்லன்னு சொன்ன அவ்ளோ தான். எனக்கு பயங்கரமா கோவம் வரும் என்று மனோகரி கார்த்திகை செல்வியை விரட்டி கொண்டு இருக்க.‌ எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் அத்தை என்றபடி கார்த்திகை செல்வி தயாராகி வந்தார். அங்கு ஏற்கனவே கந்தசாமியும் மனோகரி பாட்டி தங்கை மனோன்மணி அவர்களின் குடும்பமும் தயாராக இருந்தனர் கோவிலுக்கு செல்ல, எங்க உன் பொண்ணை காணோம் என்று மனோன்மணி கேட்க. ரெடி ஆகிட்டு இருப்பான்னு நினைக்கிறேன் அத்தை என்றார் கார்த்திகை சொல்லி.  நாமா கோவிலுக்கு தானே போறோம். ஏதோ ஊர் சுத்த போற மாதிரி இன்னும் மேக்கப் போட்டுட்டு இருக்கா சீக்கிரமா கூப்பிடு என்று மனோன்மணி எரிச்சலாக கூறினார். அவ மேக்கப் எல்லாம் போட மாட்ட அத்தை‌ ரெடி ஆகி தான் இருப்பா நான் இப்ப கூப்டுறேன்  என்ற கார்த்திகை செல்வி சிந்துவை அழைத்தார்.

சிந்து அறையில் தயாராகி தான்  மிக மிக கடுப்புடன் நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். ஆகாய வண்ண நிறத்தில் அழகான காட்டன் புடவை அணிந்து முகத்திற்கு எந்த வித செயற்கை பூச்சு கொண்டு ஒப்பனை எதுவும் செய்யாமல் கண்ணுக்கு மட்டும் சிறிதளவு கண்மை இட்டு இருந்தாள். அவளுக்கும் ஆசை தான் அவள் வயது பெண்கள் மேக்கப் போட்டு கொள்வது போல் செய்ய, ஆனால் புருவம் திருத்த கூட அவள் வீட்டில் மனோகரி அனுமதிப்பது இல்லை. கோவிலுக்கு செல்வது நல்லது விஷயம் தான். அங்கு செல்வதே நிம்மதிக்கா தானே, ஆனால் இந்த இரண்டு பாட்டிற்களுடன் செல்வது தான் அவளுக்கு பிடிக்க வில்லை. வரவில்லை என்று சொன்னாலும் கேட்க மாட்டார்களே அதையும் ஒரு பிரச்சனை ஆக்கி விடுவர். அதனால் தயாராகி அமர்ந்து இருந்தவளின் காதில்  கார்த்திகை செல்வியின் சிந்து என்ற அழைப்பு விழ பெருமூச்சு ஒன்றை வெளி விட்டு வேறு வழியில்லை என்று கிளம்பினாள் அவர்களுடன்,

விலகாதே என்னுயுரே 💔💔Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin