விலகாதே என்னுயுரே 💔💔 3

74 5 1
                                    

விலகாதே என்னுயுரே 3

அய்யா ஏன் இந்த சம்மதம் வேண்டாம்னு சொல்றீங்க. ஊத்துக்குளிலயே பெரிய இடம் பரம்பரை பணக்காரங்க. ரொம்ப கெளரவமான குடும்பம். நீங்க கூட கேள்விபட்டு இருப்பீங்களே பெரியசாமி அய்யா அவரோட ஒரே பேரன் தான் தமிழ் செல்வன். அந்த பையன் பார்க்க அழகா இருப்பார். இரண்டு டிகிரி படிச்சு  இருக்கிறார். அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்றீங்க என்று அந்த தரகர் கேட்க,

பெண்ணின் தந்தையோ யோவ் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கிறதுக்கு மாப்பிள்ளை படிச்சு இருக்கிறதோ, அழகா இருக்கிறதோ, ஏன் பணக்காரனா இருக்கிறதோ முக்கியம் இல்லை. அதை எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம் மாப்பிள்ளையோட குணம். நீ சொன்ன பையன் தமிழ் செல்வனை பத்தி ஊருக்குள்ள விசாரிச்சா ரொம்ப தப்பு தப்பா சொல்றாங்கய்யா, வேற ஏதாவது இருந்தா கூட பரவாயில்லை பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப மோசம் சொல்றாங்க. எனக்கு இருக்கிறது ஒரு பொண்ணு அவ வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். இந்த சம்மந்ததில் எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லீடுங்க என்று கூறி விட்டு உள்ளே சென்றார்..

பொள்ளாச்சி ஊத்துக்குளி அந்த பண்ணை வீட்டின் பின்புறம் அண்ணா ப்ளீஸ்ணா ப்ளீஸ்ணா என்னை விட்டுங்க. ப்ளீஸ்ணா என்று மூக்கு, வாய் எல்லாம் இரத்தம் ஒழுக கெஞ்சி கொண்டு இருந்தான் ஒரு இளைஞன் தன் எதிரே சுட்டு எரிக்கும் சூரியனாய் அதீத கோவத்தில் இருந்த தமிழ் செல்வனை பார்த்து,

அவனின் கெஞ்சல்களை எல்லாம் பொருட்படுத்தாத தமிழ் மேலும் அவன் முகத்திலே ஓங்கி குத்த இன்னுமே வாய் உடைத்து இரத்தம் கொட்டியது. இரண்டு பல்லு கூட உடைந்தது.

தம்பி விட்டுருங்க தம்பி என்று அந்த இளைஞனின் பெற்றோர் தமிழிடம் கண்ணீருடன் கையை கூப்பி கெஞ்ச, உங்க பையனை இரண்டு அடி இரத்தம் வர மாதிரி அடிச்சதுக்கு இப்படி துடிக்கிறீங்களே, அங்க உங்க பையன் பண்ண காரியத்தால ஒரு பொண்ணு உயிருக்கு போரிட்டு இருக்கா. அந்த பொண்ணை பெத்தவங்க மனசு என்ன பாடுபடும் நினைச்சு பாருங்க என்று அவர்களிடம் கோவத்தை காட்டியவன்,

விலகாதே என்னுயுரே 💔💔Onde histórias criam vida. Descubra agora