விலகாதே என்னுயுரே 6
திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கு நின்று இருந்த தமிழ். தன்னையே கடித்து கொண்டான் மனதில் சற்று நேரத்திற்கு முன்பு பாரதியை அப்படி பார்த்து கொண்டு நின்றதற்காக, ஒஏன்டா இப்படி பண்ற அந்த பொண்ணு யார் என்னனு கூட தெரியாது அப்படி பார்த்ததுட்டு நிற்கிற, அந்த பொண்ணு உன்னை பொறுக்கின்னு நினைக்காத, தமிழ் கண்ட்ரோல் கண்ட்ரோல் என்று தன்னை சமன் செய்ய கண்களை இறுக மூடி நின்றான். ஆனால் முடியவில்லை அவளை சென்று பார்க்க வேண்டும் என்று மனது கோரிக்கை விடுக்க, வேண்டாம் வேண்டாம் இது தப்பு என்று மூளை சொல்லியது. சீக்கிரமா போ கோவிலை விட்டு போயிட போற என்று மனது தூண்ட மூளை சொன்ன அறிவுரை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பாரதி நின்று இருந்த இடத்தை நோக்கி வேகமாக சென்றான். வந்ததோ நண்பன் திருமணத்திற்காக ஆனால் சரியாக முகூர்த்தம் நேரத்தில் வெளியேறி விட்டான். மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவன் என்ன என்று அருளிடம் வினவ, ஒன்னும் இல்லைடா என்று சைகை காட்டிய அருளும் தமிழ் பின்னே சென்றான்.
தமிழ் பாரதியை பார்த்த இடத்தில் இருந்து கோவில் உள்ளே மொத்த இடத்தையும் கோவிலுக்கு வெளியேயும் கூட சுற்றி சுற்றி வந்து அலசி ஆராய்ந்து விட்டான் அவன் கண்களுக்கு மறுபடியும் தரிசனம் கொடுக்கவே இல்லை பாரதி. எங்கும் தேடியும் கிடைக்காது சென்று விட்டால் போல் என்றும் அவளை தவற விட்டதையும் மனம் ஏற்கமால் வேதனை கொண்டது. அப்படியே சோர்ந்து போய் அவ்விடத்தை விட்டு சென்று விட்டான் தமிழ். நண்பனின் வருத்தத்தை பின்னாடி வந்து அருளும் கண்டு கொண்டான். முதன்முறை நண்பனை இப்படி பார்க்கிறான் அவனின் சோர்ந்த முகம் அருளுக்கு வருத்தத்தை கொடுக்க அவனும் ஒருமுறை நண்பனின் மனதை கவர்ந்தவளை தேடி அலையும் போது அவன் கண்களில் பட்டது கோவிலுக்கு வெளியே பூஜை எல்லாம் முடித்து தன் குடும்பத்தினரினுடன் அவர்கள் வந்து இருந்த காரில் ஏறிய சிந்து. அவர்கள் கார் சென்று விட்டது. பாரதி, சிந்து இவர்கள் இருவரின் கெட்ட நேரமோ என்னவோ இருவரும் ஒரே நிறத்தில் ஒரே டிசைனில் புடவை அணிந்து இருந்தனர். சிந்துவை பார்த்த அருளுக்கு மிகவும் மகிழ்ச்சி நண்பன் பார்த்த பெண்ணை அடையாளம் கண்டுவிட்டதில், அதை விட சிந்து அருகில் இருந்த கந்தசாமியை பார்த்து தான் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் அவரை அவன் பல தடவை பொள்ளாச்சி சந்தையில் பார்த்து இருக்கின்றான். அப்படியானால் பொள்ளாச்சி அருகே ஏதாவது ஒரு ஊராக தான் இருக்க வேண்டும். பொள்ளாச்சிக்கு சென்றதும் கந்தசாமி எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு மங்கையர்க்கரசி அம்மாவிடம் செய்தியை கூறினால் போதும் மீதியை அவர்கள் பார்த்து கொள்வார்கள். விரைவிலேயே நண்பனை மணக்கோலத்தில் பார்க்க போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அருள் அறியவில்லை தமிழ் பார்த்தது பார்த்தவுடன் விரும்பியது பாரதியை என்று,