நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?💞 3

966 38 4
                                    

   

  விஹான் தன்னை கலாய்த்ததில் கோபம் கொண்ட வர்ஷினி
"டேய் உன்னை.." என்றபடி அவனை அடிக்க வேண்டி ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு இறங்கினாள். அவள் ஸ்கூட்டியை பாதுகாப்பாக நிறுத்த எடுத்த  நேரத்தில் "மீ எஸ்கேப்..."என்ற படி அங்கிருந்து சிறிது தூரம் ஓடியவன் நின்று திரும்பி இவர்களைப் பார்க்க
"என் கையில் சிக்கும் போது இருக்கு டா உனக்கு.." என்று வர்ஷினி  சொல்ல அதனை கண்டு கொள்ளாதவன்
" சக்தி நீ பத்திரமா வீட்டுக்கு வந்து சேரு.." என்றுவன் அங்கிருந்து சென்று விட்டான்.

"பாருங்க எனக்கு பயந்து போரான் பயந்தாங்கோலி.." என்று விஹானை திட்டினாள் வர்ஷினி.. "ஏய் விடுடி ."என்று தங்கையை சமாதானம் செய்தாள் அம்ரிதா.. "மறுபடி மாட்டுவான் என்கிட்ட அப்போ அவனை பார்த்துக்கிறேன்.." என்று அவன் சென்ற திசையை பார்த்து கூறியவள் மீண்டும் இவர்கள் பக்கம் திரும்பி

"சரி நீங்க ரெண்டு பேரும் எப்படி இங்க வந்தீங்க நடந்தே வா?" என்றாள்..
" ஆமா அப்படியே இவங்களோட தோப்பு எல்லாம் பார்த்துட்டு மூணு பேரும் நடந்து தான் வந்தோம்.." என்று அம்ரிதா சக்தியைக் காட்டி கூறினாள்.

   "சரி வாங்க ரெண்டு பேரும் இன்ஸ் கூட்டிலேயே போகலாம்.." என்று அழைத்தாள் வர்ஷினி ..
"என்னது ஒரே ஸ்கூட்டில மூணு பேரா... நான் வரமாட்டேன். எனக்கு பயமா இருக்கு.." என்று சக்தி மறுக்க அவளை இழுத்துக் கொண்டு சென்று ஸ்கூட்டியில் அமரவைத்து அக்கா தங்கை இருவரும் அவளது முன்னாலும் பின்னாலும் அமர்ந்து கொண்டனர்..


     அம்ரிதா  இப்போது வண்டி ஓட்ட சக்தியின் பின்னால் அமர்ந்து கொண்டாள் வர்ஷினி.. மூன்று பேரை சுமந்து கொண்டு அந்த ஸ்கூட்டி மெல்ல மெல்ல அந்த சாலையில் சென்று கொண்டிருக்க திடீரென முன்னால் வந்த காரை பார்த்து பயந்த சக்தி அம்ரிதாவின் இடுப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்..அம்ரிதாவிற்கு சற்று கூச்சம் அதிகம்..

     எனவே இவள் இடுப்பை பிடித்ததும் கூச்சத்தில் அவளது கைகளில் நடுக்கம் ஏற்பட மூன்று பேரின் பாரத்தை தாங்க முடியாத ஸ்கூட்டியும் மெல்ல வளைந்தது.. அதனை மற்ற பக்கம் திருப்ப என்று நினைத்து ஒரேயடியாக திருப்ப  முன்னால் வந்த காரும் இவர்களை நெருங்கியிருக்க அதன் மீது சென்று மோதினாள்  அம்ரிதா..


நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?Where stories live. Discover now