"அம்மாடி அபி ஃபோன் பண்ணானா?" என்று அங்கு ஓரமாய் அமர்ந்து யோசனை செய்து கொண்டு இருந்த அம்ரிவிடம் கேட்டார் பாட்டி..
இவரிடம் உண்மையை சொல்ல முடியாமல்
"ஆமா பாட்டி நேத்து நைட்டு தான் பேசினார்.. ஏன் என்ன விஷயம்?" என்று அவரைப் பார்த்து சிரித்தபடி கேட்டாள்..பொய்தான் செல்கிறாள். ஆனால் அது அவருக்கு திருப்தியாக இருக்குமே என்ற காரணத்தால் தான் இவ்வாறு பொய் கூறுகிறாள். உண்மை தெரிந்தால் அவர் மனம் வருந்துவார் அல்லவா.. அபிஜித் பிசினஸ் விசயமாக மும்பை சென்று இன்றோடு இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. அவன் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி யின் கிளை ஒன்றை அங்கு ஆரம்பிப்பதற்காகவே அவன் மும்பை சென்றது ...இந்த இரண்டு மாதங்களில் அவன் அவளுடன் பெரிதாக பேசியது இல்லை. அவளுக்கு தனியே அழைத்து பேசியது சில தடவை மட்டுமே.. சில நேரம் குடும்பத்தாருடன் பேசும் போது அவள் அங்கே இருந்தால் அவளுடன் பேசுவான்.
சகஜமாக நலம் விசாரிப்பான்... அதற்குமேல் எதுவும் அவன் பேசுவதே இல்லை. அதனால் அவள் சோகமாகவே சுற்றி திரிந்தாள். அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும் பாட்டி அனுபவம் மிக்கவர் என்பதால் அவளது முகத்தில் இழையோடும் சோகத்தை கண்டு கொண்டார்..
பேரன் இல்லாததால் தான் இப்படி இருக்கிறாள் என்று யோசித்தவர் அவனை வைத்து அடிக்கடி அவளை கிண்டலும் செய்வார்.ஒ அவர் அப்படி கிண்டல் செய்யும் நேரம் வெட்கப் படுவதைப் போல் நடிப்பவள் அதன்பிறகு முன்பு போலவே சோகமாகவே மாறி விடுவாள் ..அதனைக் கண்ட பாட்டி அடிக்கடி அவன் பேசினானா என்று கேட்டு விசாரித்துக் கொள்வார்
அவளிடம் ..இப்போதும் அப்படித் தான் கேட்டார்.. அவர் அங்கிருந்து நகர்ந்ததும் அவன் மும்மை சென்ற நாள் நினைவு வந்தது அவளுக்கு.
திடீரென ஒரு நாள் உணவு உண்டு கொண்டு இருக்கும் போது
"தாத்தா இன்னைக்கு சாயங்காலமே நான் மும்பை போகணும் ..அன்னைக்கு கூட உங்க கிட்ட இதைப் பத்திச் சொன்னேனே.." என்று பேச்சை ஆரம்பித்தான் அவன் ..
"ஆமாப்பா..ஆனா இன்னைக்கேவா?"
அவருக்கு இவன் திடீரென இன்று செல்கிறேன் என்று கூறியது மனதுக்கு கவலையாக இருந்தது..
YOU ARE READING
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?
Romanceஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..