"ஆமா உங்களுக்கு ஏதாவது லவ் இருந்து அது ஃபெயிலியர் ஆச்சா?" என்று அவள் கேட்க அவளையே அழுத்தமாக பார்த்தபடி ஆம் என தலையை ஆட்டினான் அவன். அவனுடைய பதிலில் ஒரு நொடி அவள் உலகம் இயக்கத்தை நிறுத்தியது போல ஒரு உணர்வு அவளுக்கு .
"அதனால் தான் அவன் தன்னிடம் இயல்பாக நடந்து கொள்ள வில்லையா?" அவள் மனதில் ஆயிரம் கேள்விகள்.." இன்னும் அந்த பெண்ணை நினைத்து தான் என்னிடம் கூட அவன் நெருங்கவில்லையா?"... "இன்று தான் உணர்ந்த என் காதல் பூக்கும் முன்னே கருகி விட்டதா?" எண்ணிலடங்காத கேள்விகளுக்கு பதில் தான் இல்லை அவளிடம்.. அவள் முகம் வாடி இருப்பதை கண்டவன் "இதுக்கு தான் உனக்கு இது தேவையில்லாத விஷயம்னு சொன்னேன்.. இப்போவாவது தூங்குறியா?" என சொல்ல அடிபட்ட பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசியவள்
"அப்படின்னா எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. லவ் பெயிலியர்னா தாடி வளர்த்துகிட்டு சுத்த வேண்டியதுதானே.." என கூறி விட்டாள்.. அதற்க்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை..
' ஏன் அவளை திருமணம் செய்தோம்?' என சில நேரங்களில் அவன் மனதில் நினைப்பது உண்டு.. ஆனால் அவனுக்கே அதற்கான விடை இல்லாத போது அவளுக்கு எப்படி அவன் சொல்வான்..எனவே அமைதியாக அவளை தான் பார்த்து இருந்தான்.
"ம்.. என்ன பாக்குறீங்க.. நாங்க மட்டும் வாழ்க்கையில ஒருத்தன
தான் லவ் பண்ணணும்.. அதுவும் புருஷனா தான் இருக்கணும்னு லவ் பண்ணாம சுத்திக்கிட்டு இருந்தா ..அசால்ட்டா வந்து சொல்றீங்க உங்களுக்கு லவ் ஃபெயிலியர்னு.. அதுவும் அவ நினைப்பிலேயே இருந்துகிட்டு என்னை விலக்கி நிறுத்துறீங்க..இது உங்களுக்கே ஓவரா இல்லையா.. என்னை பார்த்தா லூசு மாதிரி இருக்கா என்ன ?" என அவன் பேசாமல் இருக்கும் கோபத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினாள் அவள்.அந்த நிலையிலும் அவள் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என கூறியது அவன் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.. அது ஏன் என அவனுக்கு தெரியவில்லை.. இன்னும் இவன் பேசாது இருக்கவே
"சரி நான் தானே உங்க வாழ்க்கையில இடையில வந்தேன். இடையில வந்த நானே இடையில போயிடுறேன்.உங்க காதலியோட கனவுலேயே வாழுங்க... முடிஞ்சா ஒருவேளை பண்ணுங்க ..அவளைத் தேடிப் போய் கல்யாணம் பண்ணிக்கோங்க..
VOCÊ ESTÁ LENDO
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?
Romanceஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..