"அம்மா , பாட்டி நான் போயிட்டு வரேன்.." என்றபடி அந்த காலை நேரத்தில் தன்னுடைய வேலைக்காக கிளம்பிக் கொண்டு இருந்தாள் அம்ரிதா ..
நேற்று அபிஜித் முன்னிலையில் அவள் பேசிய அனைத்தும் காலம் நேரம் தெரியாமல் அவள் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது..
இன்று அவன் கையில் சிக்கினால் உன் நிலைமை அவ்வளவு தான் என்று மனமும் அவளை பயமுறுத்தியது.இருந்தும் இரண்டாவது நாளே லீவு போட முடியாத காரணத்தால் வேலைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தாள் அவள்.. செல்லும் வழியெல்லாம் அவனின் நினைப்புதான்.. வேறொன்றுமில்லை அவன் என்ன செய்வான் என்ற பயம் அவளுக்கு.. ஒன்றா இரண்டா கூறினாள்.. எத்தனை பொய்கள் ...அதை அவன் கேட்பான் என்று இவள் கனவா கண்டாள்.. எப்படியோ அவளது ஸ்கூட்டியில் மில்லுக்கு வந்து சேர்ந்து இருந்தாள்.
உள்ளே சென்று பார்க்க யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. எனவே அங்கு சுற்றிப் பார்க்க ஆரம்பித்து விட்டாள் அவள்.. அப்போது தான் அங்கு வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வேலை செய்யும் ஒரு பெண்மணி மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தையுடன் வந்தாள்..
அவரை கேள்வியாக பார்த்த வண்ணம் இருந்தாள்..
இங்கு எல்லாம் ஏன் இவ்வாறு சின்னக் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வருகின்றார்கள் என அந்தப் பெண்மணியை பார்க்க அவளை கண்டு சிறு புன்னகையுடன் கடந்து செல்ல "அக்கா ...' என்று அவரை நிறுத்தி இருந்தாள்."என்னம்மா ?.."என்றபடி அவரும் வர குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தவள் "என்னக்கா இது இங்கெல்லாம் போய் இவ்வளவு சின்ன குழந்தையை கூட்டிட்டு வரீங்க..?" என்று அவரிடம் கேட்க
" நாங்க இங்க குழந்தையை வச்சுக்குறதில்லம்மா.. அதோ அங்க இருக்கு பாருங்க ஒரு கட்டிடம் அங்க தான் எல்லாக் குழந்தைகளையும் விடுவோம்.. இடையில போய் பார்த்துட்டு வருவோம்.. இப்போ அங்க யாருமே இல்ல.. அதான் இந்த இடத்திற்கு கூப்பிட்டு கிட்டு வந்து இருக்கேன்.." என்று சொல்ல அவரை வியப்பாக பார்த்து இருந்தாள் ..
YOU ARE READING
நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?
Romanceஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..