நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ?💞18

757 30 0
                                    

 

அவர்கள் பேசியதைக் கேட்டு தனது கண்ணீரை மேலும் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு ஓரமாக சென்று கண்ணீர் சிந்தினாள்  அம்ரிதா. தன்னால் முடிந்த மட்டும் யாருக்கும் தெரியாமல் மௌனமாக அழுது தீர்த்தவள் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு திரும்பி உள்ளே செல்ல முற்படுகையில் அங்கு கோயில் தூணில் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அவளது கணவன் அபிஜித்தை  எப்போதுதான் கண்டாள்.

அவனைக் கண்டு ஆடித்தான் போனாள் அவள். அவன் அந்தப் பெண்கள் பேசியதெல்லாம் கேட்டு விட்டானோ என பயந்தபடி அவன் அருகே வந்து அவனை நிமிர்ந்து பார்க்காமல்
"இங்க என்ன பண்றீங்க ..? வாங்க போகலாம் .."என கூறி விட்டு நடக்க முற்படும் போது அவளது கையை இறுகப் பிடித்து தடுத்து நிறுத்தினான் ..

பயத்துடன் அவள் அவனை ஏறிட்டுப் பார்க்க
"வா வீட்டுக்கு போகலாம்" என்று கூறியவன் அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். எதற்காக வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் என்று மனதில் நினைத்தாலும் வெளியில் கேட்கும் தைரியம் இல்லை அவளுக்கு. அவனது முகம் அப்படி இருகிபோய் இருந்தது..

மேலும் வீட்டில் உள்ளவர்கள் இடையில் ஏன் சென்றீர்கள் என்று கேட்டு விட்டால் என்ன சொல்வது என்ற யோசனையும் அவளுக்கு இருந்தது. அதை அவனிடமும் கூற முடியாமல் அவனது பின்னாலேயே சென்றாள். அவளை அழைத்து வந்தவன் அங்கு நின்ற அவனுடைய காரில் அவளை ஏற சொல்லி கண்களால் சைகை செய்து விட்டு தானும் ஏறி காரைக் கிளப்பி அவன் வீட்டிற்கு விரைவாகவே வந்து சேர்ந்தான்.

அவள் காரில் இருந்து இறங்கும் சமயம் விஹானுக்கு அழைத்து தாங்கள் இருவரும் வீட்டுக்கு வந்து விட்டதாகவும் அம்ரிதாவுக்கு உடம்பு சரியில்லை என்றும் கூறி போனை வைத்தான் .. அவள் எதுவும் பேசாமல் அறைக்குள் செல்ல அவளது பின்னால் வந்தவன் அறை கதவை மூடி விட்டு அவளைப் பார்த்தான்.

அவள் தன் தலையை குனிந்தபடியே இருந்தாள் அவனை பார்க்காமல்.
" ஐ அம் சாரி அம்ரிதா.. இப்போ கோயில்ல வச்சு அவங்க உன்னை பேசினதுக்கு முழு காரணமும் நான் தானே ..
நான் உன்னை கல்யாணம் பண்ணதால  வந்ததுதான் இது எல்லாம். உன்னை கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது..

நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?Where stories live. Discover now