நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ?💞24

739 31 0
                                    

இருவரும் மும்பையை நோக்கி கிளம்பி கொண்டு இருந்தனர். திருமணத்திற்குப் பிறகான முதல் தூரப்பயணம் அவனுடன்.. மனதில் துக்கம் இருந்த போதும் பிளைட்டில் அவனுடைய கைகோர்த்து அமர்ந்திருந்தாள் பெண்ணவள். அவனுக்கும் அது பிடித்து இழுக்கவே ஆழ்ந்து அனுபவித்தான் அவன். மும்பையில் நான்கு நாட்கள் தங்குவதாக கூறித்தான் அவளை அழைத்து வந்திருந்தான்..

அங்கு பிசினஸ் ஆரம்பித்த பிறகு அவர்கள் வந்தால் தங்கிக் கொள்ள வேண்டுமென்று ஒரு பிளாட்டை நண்பர்கள் இருவரும் சேர்ந்து வாங்கியிருந்தனர். அதுதான் இவர்கள் தங்கினார்கள்.. விக்னேஷ் மனைவியுடன் வந்திருந்தான். அவனது மனைவி சுவாதி அம்ரிதாவுடன் நட்பாக பழகினாள்.

ஆண்களை மறந்து பெண்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.. இரவு உணவை வெளியில் இருந்து வாங்கி வந்த விக்னேஷ், அபிஜித் இருவரும் தான் அவர்களை நடப்புக்கு கொண்டு  வந்தனர்..
"ஓ சாரிங்க.. அம்ரிதா நல்லா பேசுறா.. அதுல உங்களை மறந்தே போயிட்டேன் .."என்று சுவாதி கூற செல்லமாக முறைத்தான் விக்னேஷ்.. உடனே அவனை அணைத்து சமாதானப் படுத்தினாள் அவன் மனைவி..

அம்ரிதா தான் அதை ஏக்கமாக பார்த்தபடி இருந்தாள்.. அவளும் இப்படி வாழ வேண்டும் என எதிர் பார்த்தவள் தானே ..அவளும் ஒரு பெண் அல்லவா.. சட்டென அவளை அறியாமலே கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.. மற்றவர்கள் பார்க்கும் முன்னே அதைத் துடைத்துக் கொண்டாள் பெண்ணவள். ஆனால் வந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அபிஜித்தின் கண்களுக்கு அது நன்றாகவே தெரிந்தது.

ஆனால் விக்னேஷ் இதை கண்டதை தான் இருவரும் அறியவில்லை ..எதார்த்தமாக திரும்பிப் பார்த்தவன் கண்ணில்  தான் இந்த காட்சி பட்டது.. உடனே திரும்பி அபிஜித்தை பார்த்தான்
.. அவன் கண்களில் அத்தனை வலியுடன் அம்ரிவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.. வந்ததிலிருந்து இருவரும் சரியாக பேசிக் கொள்ளாதது வேறு அவனது சந்தேகத்தை தூண்டி விட்டது..

இருவருக்கும் இடையில் ஏதோ நடந்து கொண்டு இருக்கிறது என உறுதியாக நம்பியவன் நண்பனிடம் பேச முடிவெடுத்தான். "சரி சரி வாங்க சாப்பிடலாம்" என அழைத்த விக்னேஷ் முன்னே நடக்க மற்ற மூவரும் அவன் பின்னால் சென்றனர் .இரவு உணவை முடித்தவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது தருனிடமிருந்து அபிஜித்திற்கு   அழைப்பு வரவே மூவரிடமும் கூறி விட்டு அவனுடன் பேச சென்று விட்டான்..

நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?Où les histoires vivent. Découvrez maintenant