நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ?💞20

781 33 2
                                    


திடீரென ஒருவரால் மாற முடியாது அல்லவா ..
எனவே அபிஜித் மெல்ல மெல்ல மாறட்டும் என்று அவனை அவன் போக்கிலேயே விட்டு விட்டாள். அவள் அவனிடம் காட்டி கொள்ளா விடினும் அவனை நினைக்கையில் அவளுக்கும் கவலைதான். ஏன் இப்படி ஒரு நிலை அவனுக்கு வர வேண்டும் என்று சில நேரம் கடவுளிடம் கூட சண்டை போடுவாள் பெண்ணவள்..

அவளுக்கு குழந்தைகள் என்றால் உயிர் என்று கூறலாம் இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை எனும்போது ஒருபக்கம் கவலையாக இருந்தாலும் தவறுதலாக‌ கூட அவனிடம் அதை காட்டி விடக் கூடாது என உறுதியாக இருந்தாள் அவள்.. என்ன பிரச்சினை வந்தாலும் அவனுடன் சேர்ந்து வாழ அவள் நினைத்திருக்க அவனோ தினம் தினம் யோசித்து அவளை  விட்டு பிரிய முடிவெடுத்து இருந்தான்.

அதற்கு காரணமும் உண்டு. பொதுவாக ஊர் பக்கங்களில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப் இல்லை என்றால் முதலில் பெண்ணிடம் தான் குறை  இருக்கின்றது என்று கூறிவிடுவார்கள் சற்றும் யோசிக்காமல் ..

அதுமட்டுமா தினம் தினம் வார்த்தைகளால் அந்தப் பெண்ணை வதைப்பதும் உண்டு.
அதற்கு அன்று அந்தப் பெண்கள் கோயிலில் வைத்து பேசியதே சான்று. அடுத்து அவர்கள் செய்வது அந்த ஆண் மகனுக்கு வேறு திருமணம் செய்து வைப்பது ..அதை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

அவள்தான் வேண்டும் அவனுக்கு.. மனைவியாக, காதலியாக, எல்லாமுமாக அவளே வேண்டும்.. அதை விட முக்கியமானது குறை இருப்பது அவனுக்கு அல்லவா. அவள் ஒன்றுமே அறியாத பேதைப் பெண்..

வீட்டில் இல்லாத நேரம் அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வைத்து டிவோர்ஸ்  கொடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பான். ஆனால் அந்த முடிவு வீடு வந்து அவளைப் பார்க்கும் வரை மட்டுமே இருக்கும்.

அவளை பார்த்து விட்டால் போதும் அவளை பிரிய மனமே வராது. அவளது காதல் மொத்தமும் தனக்கே வேண்டும் என எதிர்பார்ப்பான்.
மொத்தத்தில் அவன் குழம்பிப் போயிருந்தான் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல்.
அம்ரிதா  கணவன் உட்பட அனைவர் முன்னிலையிலும் தனது சோகத்தை மறைத்து எப்போதும் போல குறும்புக்காரியாகவே வலம் வந்தாள் ..

நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?Where stories live. Discover now